இது புதுசு

டாடா டியாகோ EV இந்தியாவில் அறிமுகம் - விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

Update: 2022-09-28 09:14 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
  • புதிய எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடல் நான்கு விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்திய கார் உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் இந்திய சந்தையில் புதிய டியாகோ EV எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டாடா டியாகோ EV எலெக்ட்ரிக் ஹேச்பேக் விலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய டியாகோ EV காருக்கான முன்பதிவு அக்டோபர் 10 ஆம் தேதி துவங்க இருக்கிறது. வினியோகம் ஜனவரி மாத வாக்கில் துவங்க உள்ளது.

புதிய டியாகோ EV மாடலின் முன்புறம் பிளான்க்டு-ஆஃப் கிரில், பிரத்யேக EV பேட்ஜ், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எலெக்ட்ரிக் புளூ நிற ஹைலைட்கள், பக்கவாட்டு பகுதியில் ட்வீக் செய்யப்பட்ட அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் உள்புறமும் எலெக்ட்ரிக் புளூ நிறம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த காரில் ஓட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஸ்டீரிங் வீல் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

மேலும் புதிய டியாகோ EV மாடலில் பல்வேறு டிரைவ் மோட்கள், ரி-ஜென் மோட்கள், குரூயிஸ் கண்ட்ரோல், 45 Zகனெக்ட் அம்சங்கள், ஸ்மார்ட்வாட்ச் வசதி, லெதர் இருக்கை மேற்கவர்கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள், எலெக்ட்ரிக் ஆட்டோ போல்டு ORVMகள், பவர்டு பூட் ஒபனிங் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

புதிய டாடா டியாகோ EV மாடலில்- 192. கிலோவாட் ஹவர் மற்றும் 24 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவை முறையே 250 மற்றும் 315 கிமீ ரேன்ஜ் வழங்குகின்றன. இத்துடன் 3.3 கிலோவாட் மற்றும் 7.2 கிலோவாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளன. மேலும் டிசி பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதை கொண்டு காரை 57 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும்.

Tags:    

Similar News