கோப்புப்படம்
டெஸ்டிங்கில் சிக்கிய டாடா பன்ச் EV
- டாடா பன்ச் EV மாடல் ALFA பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது.
- டாடா பன்ச் EV மாடல் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே தனது பெட்ரோல், டீசல் வாகனங்களை எலெக்ட்ரிக் வடிவில் விற்பனை செய்து வரும் டாடா மோட்டார்ஸ், புதிய எலெக்ட்ரிக் கார்களின் டெஸ்டிங்கை தீவிரமாக செய்து வருகிறது. அதன்படி டாடா பன்ச் EV மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
புதிய ஸ்பை படங்களில் டாடா பன்ச் EV மாடலின் வெளிப்புற தோற்றம் அதன் இன்டர்னல் கம்பஷன் என்ஜின் வேரியன்டை போன்றே காட்சியளிக்கிறது. இந்த காரின் முன்புற பம்ப்பர் ரிடிசைன் செய்யப்பட்டு, கனெக்டெட் லைட் பார் காரின் முன்புறம் முழுக்க நீளும் என்று தெரிகிறது. இத்துடன் EV காருக்கான அலாய் வீல்கள், 360 டிகிரி கேமராக்கள் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன.
காரின் உள்புறம் 2 ஸ்போக், ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல் காணப்படுகிறது. இதே போன்ற டிசைன் டாடா கர்வ் கான்செப்ட் மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த காரின் ஸ்டீரிங் வீல் பின்புறத்தில் பேடில் ஷிஃப்டர்களும் இடம்பெற்றுள்ளன. இவை தவிர மற்ற அம்சங்கள் டாடா பன்ச் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது.
அதன்படி 7 இன்ச் டச் ஸ்கிரீன் யூனிட், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், 6 ஏர்பேக், ISOFIX மற்றும் இதர அம்சங்கள் வழங்கப்படுகிறது. டாடா பன்ச் EV மாடல் ALFA பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை கொண்டிருக்கும்.
Photo Courtesy : Rushlane