இது புதுசு

ஏராளமான முதல்முறை அம்சங்களுடன் அறிமுகமாகும் டாடா நெக்சான் பேஸ்லிஃப்ட்

Published On 2023-06-24 12:43 IST   |   Update On 2023-06-24 12:43:00 IST
  • இந்தியாவில் நெக்சான் கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வெற்றிகர மாடலாக இருந்து வருகிறது.
  • புதிய நெக்சான் பேஸ்லிஃப்ட், டாடா கர்வ் கான்செப்ட்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தகவல்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் பேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய நெக்சான் பேஸ்லிஃப்ட் மாடல் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நெக்சான் பேஸ்லிஃப்ட் மாடலில் ஏராளமான முதல் முறை அம்சங்கள் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இத்துடன் முற்றிலும் புதிய பவர்டிரெயின் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நெக்சான் மாடலில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் அறிமுகமானதில் இருந்தே நெக்சான் மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வெற்றிகர மாடலாக இருந்து வருகிறது. 2017 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டாடா நெக்சான் மாடல் 2020 ஆண்டு, மிட்-லைஃப் அப்டேட் கொடுக்கப்பட்டது.

 

2020 அப்டேட்டை தொடர்ந்து நெக்சான் மாடல் விற்பனை முன்பு இருந்ததை விட மேலும் அதிகரித்தது. அந்த வகையில், தற்போது அறிமுகமாகும் நெக்சான் பேஸ்லிஃப்ட் மாடல் விற்பனையில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

2023 டாடா நெக்சான் பேஸ்லிஃப்ட் மாடலில் முற்றிலும் புதிய வெளிப்புற டிசைன் வழங்கப்படுகிறது. இந்த மாடல் டாடா கர்வ் கான்செப்ட்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. கர்வ் கான்செப்ட் மாடலின் ப்ரோடக்ஷன் வெர்ஷன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா கர்வ் மாடல் ஐ.சி. என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News