இது புதுசு

டாடா கர்வ் டெஸ்டிங் துவக்கம்.. இந்திய வெளியீடு எப்போ தெரியுமா?

Published On 2023-07-12 12:40 IST   |   Update On 2023-07-12 12:40:00 IST
  • டாடா கர்வ் மாடலில் எல்இடி லைட் பார்கள், எல்இடி டெயில் லைட்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிலேட்கள் உள்ளன.
  • டாடா கர்வ் ப்ரோடக்ஷன் ரெடி மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என்று தெரிகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஐசி என்ஜின் கொண்ட கர்வ் கூப் எஸ்யுவி மாடலை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. புதிய டாடா கர்வ் மாடலின் வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் டாடா கர்வ் மாடல் இந்திய சந்தையில் டெஸ்டிங் செய்யப்படும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஸ்பை படங்களின் படி டாடா கர்வ் மாடல் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த காரின் பின்புறம் போலியான எக்சாஸ்ட் வழங்கப்பட்டு, கூப் சில்ஹவுட் மறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், பிளாக்டு-அவுட் வீல்கள், ஏ பில்லரில் மவுன்ட் செய்யப்பட்ட ORVM-கள் வழங்கப்பட்டுள்ளன.

 

இத்துடன் புதிய டாடா கர்வ் மாடலில் எல்இடி லைட் பார்கள், எல்இடி டெயில் லைட்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிலேட்கள், கான்டிராஸ்ட் நிறத்தால் ஆன ORVMகள் மற்றும் ரூஃப் வழங்கப்படுகிறது. கர்வ் கான்செப்ட் மாடலில் 2-ஸ்போக் மல்டி பன்ஷன் ஸ்டீரிங் வீல், ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய கியர் லீவர், டிரைவ் மோட்களுக்காக சுழலும் டயல் உள்ளது.

கர்வ் ப்ரோடக்ஷன் ரெடி மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த என்ஜின் 122 ஹெச்பி பவர், 225 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. புதிய டாடா கர்வ் மாடல் CNG ஆப்ஷனிலும் கிடைக்கும் என்று தெரிகிறது. 

Tags:    

Similar News