இது புதுசு

வேற லெவல் அம்சங்கள், அசத்தல் தோற்றம் - புது ஆல்டோ கார் அறிமுகம்

Update: 2022-06-28 06:03 GMT
  • மாருதி சுசுகி நிறுவனம் ஆல்டோ லாபின் LC பெயரில் புது மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
  • இதில் ஆல் வீல் டிரைவ் வசதி உள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புகழ் பெற்ற ஹேச்பேக் மாடலாக மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ விளங்குகிறது. இந்தியாவில் அறிமுகமானது முதலே ஆல்டோ மாடல் அமோக வரவேற்பை பெற்று அசத்தியது. இந்தியாவில் ஆல்டோ காரின் பேஸ்லிப்ட் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

ஜப்பான் நாட்டில் மாருதி சுசுகி நிறுவனம் ஆல்டோ லாபின் LC மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடலில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த கார் அழகிய ரெட்ரோ தோற்றம் கொண்டுள்ளது. இந்தியாவில் ஆல்டோ லாபின் LC அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.


புதிய சுசுகி ஆல்டோ லாபின் LC மாடலில் 660சிசி, 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இத்துடன் CVT கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் அதிகபட்சம் 63 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும். ஜப்பானில் தற்போது அறிமுகமாகி இருக்கும் ஆல்டோ லாபின் LC மாடலின் அம்சங்கள் இந்தியாவில் கிடைக்கும் ஆல்டோ மாடலை முற்றிலும் வித்தியாசமாக உள்ளது.

ஆல்டோ லாபின் LC மாடலின் முன்புற இருக்கைகளில் ஹீட்டிங் வசதி உள்ளது. மேலும் ஆட்டோமேடிக் ஏ.சி., அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் டில்ட் வசதி கொண்ட ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் கீலெஸ் எண்ட்ரி, புஷ் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் அம்சம் உள்ளது.

காரின் உள்புறம் 7 இன்ச் டிஜிட்டல் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ரிவர்ஸ் பார்கிங் கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள டிரைவர் டிஸ்ப்ளேவில் மைலேஜ், காரில் இருக்கும் எரிபொருள் கொண்டு எவ்வளவு தூரம் செல்ல முடியும் உள்பட பல்வேறு விவரங்களை பார்க்க முடியும்.

Tags:    

Similar News