இது புதுசு

தொடர் சோதனையில் ஷாட்கன் 650 - இணையத்தில் வெளியான ஸ்பை படங்கள்!

Published On 2023-03-01 10:56 GMT   |   Update On 2023-03-01 10:56 GMT
  • ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் தனது சூப்பர் மீடியோர் 650 ஃபிளாக்ஷிப் மாடலை அறிமுகம் செய்தது.
  • இதுதவிர ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய ஷாட்கன் 650 மாடல் உருவாக்கி வருகிறது.

ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் மோட்டார்சைக்கிள் சூப்பர் மீடியோர் 650 மாடலை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. புதிய ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 துவக்க விலை ரூ. 3 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய குரூயிசர் மாடலில் பல்வேறு அம்சங்கள் முதல்முறையாக ராயல் என்பீல்டு மாடலில் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2022 EICMA நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட சூப்பர் மீடியோர் 650 அதன் பின் ரைடர் மேனியா நிகழ்விலும் பயனர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. ஏற்கனவே ப்ரோடக்ஷன் வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு சூப்பர் மீடியோர் 650 அறிமுகம் செய்யப்பட்டது. சூப்பர் மீடியோர் 650 மற்றும் உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ள ஷாட்கன் 650 சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

 

புதிய அட்வென்ச்சர் டூரர் மாடல் புதிய பிளாட்பார்மில் உருவாகி வருவதாகவும், இதில் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த மாடல் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். தற்போதைய ஸ்பை படங்களில் இந்த மாடல் புதிய கிராப் ரெயில், அளவில் பெரிய ரியர் டிஸ்க் பிரேக் கொண்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது.

இந்த மாடலில் 648சிசி பேரலல் டுவின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 47 பிஎஸ் பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது.

Photo Courtesy: Powerdrift

Tags:    

Similar News