இது புதுசு

வால்வோ XC60 மற்றும் XC90 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்

Published On 2022-09-22 10:26 GMT   |   Update On 2022-09-22 10:26 GMT
  • வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் XC60 மற்றும் XC90 என இரு கார்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
  • இரண்டு புதிய வால்வோ கார்களிலும் பெரும்பாலான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.

வால்வோ இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய XC60 மற்றும் XC90 மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இத்துடன் XC40 பேஸ்லிப்ட், 2023 வால்வோ S90 போன்ற மாடல்களையும் வால்வோ அறிமுகம் செய்து இருக்கிறது. 2023 வால்வோ XC60 மாடலின் விலை ரூ. 65 லட்சத்து 90 ஆயிரம், என துவங்குகிறது. வால்வோ XC90 மாடல் விலை ரூ. 94 லட்சத்து 90 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய வால்வோ XC60 மாடலில் முற்றிலும் புது கிரில், ஹெட்லேம்ப், புது மாற்றம் செய்யப்பட்ட பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் உள்புறம் ஆண்ட்ராய்டு சார்ந்த ஒஎஸ், டச் ஸ்கிரீன், 1100 வாட் போவர்கள், வில்கின்ஸ் சவுண்ட் சிஸ்டம், ADAS அம்சம், 360 டிகிரி கேமரா, அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், ஏர் பியூரிபையர், பானரோமிக் சன்ரூப் வழங்கப்பட்டு இருக்கிறது.

வால்வோ XC90 மாடலில் மேம்பட்ட ஏர் பியுரிபையர், PM 2.5 பில்ட்டர், ஆண்ட்ராய்டு சார்ந்த டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், பில்ட்-இன் கூகுள் சேவைகள், ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 19 ஸ்பீக்கர் போவர் மற்றும் வில்கின்ஸ் ஸ்டீரியோ சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பிற்கு இந்த மாடலில் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் மாணிட்டர், 360 டிகிரி கேமரா, லேன் கீப் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.

புதிய வால்வோ XC90 மாடலில் 2.0 லிட்டர் என்ஜினுடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 300 ஹெச்பி பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது.

வால்வோ XC60 மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோவ்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இறுக்கிறது. இந்த என்ஜின் 250 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் புதிய XC60 மாடல் ஆடி கியூ5, பிஎம்டபிள்யூ X3 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் GLC மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Tags:    

Similar News