இது புதுசு

முற்றிலும் புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா இந்தியாவில் அறிமுகம்

Published On 2022-09-26 10:42 GMT   |   Update On 2022-09-26 10:42 GMT
  • மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிராண்ட் விட்டாரா மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • இந்த காருக்கான முன்பதிவு ஜூலை மாத வாக்கில் துவங்கி நடைபெற்று வந்தது.

மாருதி சுசுகி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா மாடலின் இந்திய விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது. புதிய கிராண்ட் விட்டாரா மிட்-சைஸ் எஸ்யுவி விலை ரூ. 10 லட்சத்து 45 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. முன்னதாக மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடலுக்கான முன்பதிவு ஜூலை மாத வாக்கில் துவங்கியது.

புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடல் சிக்மா, டெல்டா, சீட்டா, ஆல்பா, சீட்டா பிளஸ் மற்றும் ஆல்பா பிளஸ் என ஆறு விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார்- நெக்சா புளூ, ஆர்க்டிக் வைட், ஸ்பிலெண்டிட் சில்வர், கிராண்டியர் கிரே, செஸ்ட்நட் பிரவுன், ஒபுலண்ட் ரெட், ஆர்க்டிக் வைட் மற்றும் பிளாக் ரூப், ஸ்பிலெண்டிட் சில்வர் மற்றும் பிளாக் ரூப், ஒபுலண்ட் ரெட் மற்றும் பிளாக் ரூப் என ஒன்பது விதமான நிறங்களில் கிடைக்கிறது.

இந்த கார் 1.5 லிட்டர் K15C பெட்ரோல் என்ஜின், மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் மற்றும் 1.5 லிட்டர் TNGA பெட்ரோல் என்ஜின் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் சிஸ்டம் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் 102 ஹெச்பி பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஸ்டிராங் ஹைப்ரிட் வெர்ஷன் 91 ஹெச்பி பவர், 122 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் eCVT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய கிராண்ட் விட்டாரா மாடல் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், காண்டிராஸ்ட் நிற ஸ்கிட் பிலேட்கள், ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள், ஷார்க் பின் ஆண்டெனா, பானரோமிக் சன்ரூப், டூயல் டோன் பிளாக் மற்றும் பிரவுன் இண்டீரியர் கொண்டிருக்கிறது.

இத்துடன் டிஜிட்டல் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், ஹெச்யுடி, பேடில் ஷிப்டர்கள், சுசுகி கனெக்ட் டெலிமேடிக்ஸ், டிரைவ் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 49 ஆயிரம் என நிர்ணண் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News