இது புதுசு

இந்தியாவில் அறிமுகமான பென்ஸ் GLB - விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2022-12-03 10:23 GMT   |   Update On 2022-12-03 10:23 GMT
  • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட GLB மாடல் இந்தியாவில் அறிமுகமானது.
  • புதிய பென்ஸ் GLB மாடல் இந்திய சந்தையில் மொத்தம் மூன்று வித வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய GLB 3-ரோ எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLB மாடல் விலை ரூ. 63 லட்சத்து 8 ஆயிரம் என துவங்குகிறது. இந்த மாடல் 200, 220d மற்றும் 220d 4மேடிக் என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய பென்ஸ் GLB பேஸ் வேரியண்ட் விலை ரூ. 63 லட்சத்து 8 ஆயிரம் என துவங்குகிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLB 220d மற்றும் GLB 220d 4 மேடிக் வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 66 லட்சத்து 8 ஆயிரம் மற்றும் ரூ. 69 லட்சத்து 8 ஆயிரம் என துவங்குகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் GLB மாடலில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் 7 ஸ்பீடு மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளன. இதன் பெட்ரோல் என்ஜின் 161 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 188 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

அம்சங்களை பொருத்தவரை பென்ஸ் GLB மாடலில் சதுரங்க வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லேம்ப்கள், 2-பீஸ் எல்இடி டெயில் லைட்கள், பானரோமிக் சன்ரூஃப், வெண்டிலேஷன் வசதி கொண்ட பவர்டு முன்புற இருக்கைகள், 7 ஏர்பேக், இரண்டு 10.25 இன்ச் ஸ்கிரீன்கள் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்று செயல்படுகின்றன.

Tags:    

Similar News