இது புதுசு

விரைவில் இந்தியா வரும் மஹிந்திரா XUV300 ஸ்போர்ட்ஸ்

Update: 2022-10-01 11:17 GMT
  • மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV300 ஸ்போர்ட்ஸ் மாடல் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.
  • முன்னதாக 2022 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் மஹிந்திரா XUV300 ஸ்போர்ட்ஸ் காரை காட்சிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா நிறுவனம் விரைவில் XUV300 காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் சக்திவாய்ந்த வேரியண்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய வேரியண்ட் XUV300 ஸ்போர்ட்ஸ் எனும் பெயரில் வெளியாக உள்ளது. 2022 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் மஹிந்திரா நிறுவனம் XUV300 ஸ்போர்ட்ஸ் மாடலை காட்சிக்கு வைத்திருந்தது.

புதிய மஹிந்திரா XUV300 ஸ்போர்ட்ஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினின் ரி-டியுன் செய்யப்பட்ட மாடல் ஆகும். இதில் உள்ள என்ஜின் 128 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படும் என தெரிகிறது. சமீபத்தில் வெளியான தகவல்களில் மஹிந்திரா நிறுவனம் XUV300 ஸ்போர்ட்ஸ் மாடலை நான்கு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யும் என கூறப்பட்டது.

காட்சிக்கு வைக்கப்பட்ட மாடலை பொருத்தவரை இந்த எஸ்யுவி மாடலில் ஸ்போர்ட்ஸ் பேட்ஜிங், காண்டிராஸ்ட் நிற பாடி டீகல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் காரின் டேஷ்போர்டு மற்றும் செண்டர் கன்சோல் போன்ற பகுதிகளில் ரெட் இன்சர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. மஹிந்திரா XUV300 ஸ்போர்ட்ஸ் மாடல் பற்றிய இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும் புதிய மஹிந்திரா XUV300 ஸ்போர்ட்ஸ் மாடல் கியா சொனெட் 1.0 மற்றும் ஹூண்டாய் வென்யூ 1.0 டர்போ என இரண்டு கார்களுக்கு போட்டியாக அமையும்.

Tags:    

Similar News