இந்திய டெஸ்டிங்கை துவங்கிய மஹிந்திரா BE.05 EV - இணையத்தில் வெளியான ஸ்பை படங்கள்!
- ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்டது.
- மஹிந்திரா BE.05 மாடல் 4300mm நீளம், 2775mm வீல்பேஸ் கொண்டிருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் அடுத்த நான்கு ஆண்டுகளில் ஐந்து புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவிக்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே XUV400 மாடலை அறிமுகம் செய்த மஹிந்திரா தற்போது பிளாக்ஷிப் எஸ்யுவி மாடல்களில் எலெக்ட்ரிக் வசதியை வழங்க முடிவு செய்து இருக்கிறது.
இதற்காக மஹிந்திரா நிறுவனம் BE (Bron Electric) பிரிவில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. மஹிந்திராவின் BE துணை பிராண்டின் முதல் மாடலாக BE.05 அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் பிரிட்டனில் நடைபெற்ற ஆட்டோ விழாவில் இந்த கார் முதன்முதலாக காட்சிக்கு வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த வரிசையில், மஹிந்திரா BE.05 மாடல் இந்திய சாலைகளில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அளவீடுகளை பொருத்தவரை மஹிந்திரா BE.05 மாடல் 4300mm நீளம், 2775mm வீல்பேஸ் கொண்டிருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் புதிய INGLO பிளாட்ஃபார்மில், லெவல் 2 ADAS தொழில்நுட்பத்தை BE.05 மாடல் கொண்டிருக்கிறது. மஹிந்திரா BE.05 மாடலின் உள்புறம் டூயல் ஸ்கிரீன் செட்டப், புதிய ஸ்டீரிங் வீல் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்ட இருக்கைகள் வழங்கப்படுகின்றன.
Photo Courtesy: Rushlane