இது புதுசு

ஜீப் காம்பஸ் ஸ்பெஷல் எடிஷன் டீசர்கள் வெளியீடு

Update: 2022-08-05 10:52 GMT
  • ஜீப் நிறுவனம் இந்திய சந்தையில் காம்பஸ் மாடல் காரை 2017 ஆகஸ்ட் மாத வாக்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
  • கடந்த ஆண்டு ஜீப் காம்பஸ் மாடல் மிட்-லைஃப் அப்டேட் செய்யப்பட்டது.

இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் மாடல் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. இதனை கொண்டாட ஜீப் நிறுவனம் முடிவு செய்து உள்ளது. அதன்படி ஜீப் காம்பஸ் 5-ஆவது ஆனிவர்சரி எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் ஜீப் நிறுவனத்தின் முதல் மாடலாக ஜீப் காம்பஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விற்பனை ஆகஸ்ட் 2017 வாக்கில் துவங்கியது.

விற்பனை துவங்கியதில் இருந்தே ஜீப் காம்பஸ் மாடல் கணிசமான யூனிட்கள் விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டு இந்த காருக்கு மிட்-லைஃப் அப்டேட் வழங்கும் முன் பல முறை இந்த காரின் லிமிடெட் எடிஷன் வேரியண்ட்களை ஜீப் இந்தியா தொடர்ந்து அறிமுகம் செய்து வந்தது. இதன் மூலம் கார் மாடலை உயிர்ப்புடன் வைத்திருந்தது.


இந்த ஆண்டு துவக்கத்தில் கூட ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் மாடலின் நைட் ஈகிள் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இது தற்போதைய காம்பஸ் மாடலின் ஆல்-பிளாக் தீம் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் கிளாஸ் பிளாக் நிற கிரில், 18 இன்ச் பிளாக் அலாய் வீல்கள், பிளாக் ரூப் ரெயில்கள், கிளாஸ் பிளாக் விங் மிரர்கள் மற்றும் ஃபாக் லேம்ப் பெசல்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஜீப் காம்பஸ் 5-ஆவது ஆனிவர்சரி எடிஷன் மாடலின் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் அதிக மாற்றங்களை எதிர்பார்க்கலாம். காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர இந்த காரில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படாது என்றே தெரிகிறது. இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

இதன் டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News