இது புதுசு

பொது வெளியில் சார்ஜ் செய்யப்படும் கிரெட்டா EV - இணையத்தில் லீக் ஆன புகைப்படம்

Published On 2023-05-08 14:55 IST   |   Update On 2023-05-08 14:55:00 IST
  • புதிய ஹூண்டாய் கிரெட்டா EV மாடல் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
  • கிரெட்டா EV மாடல் தோற்றத்தில் அதன் ஐசி என்ஜின் கொண்ட வெர்ஷன் போன்றே காட்சியளிக்கிறது.

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது கிரெட்டா மிட் சைஸ் எஸ்யுவி மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய கிரெட்டா EV மாடல் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் மற்றும் ஐயோனிக் 5 மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது. பொது வெளியில் சோதனை செய்யப்படும் கிரெட்டா EV மாடல் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

புகைப்படங்களின் படி கிரெட்டா EV மாடல் தோற்றத்தில் அதன் ஐசி என்ஜின் கொண்ட வெர்ஷன் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த காரின் பம்ப்பர்கள் வித்தியாசமான நிறம் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கிரெட்டா EV ப்ரோடக்ஷன் வெர்ஷனில் பம்ப்பர் ரிடிசைன் செய்யப்பட்டு இருக்கும் என்றே தெரிகிறது.

 

எலெக்ட்ரிக் கார் என்பதால், இந்த மாடலில் எக்சாஸ்ட் டெயில்பைப் இடம்பெறவில்லை. மேலும் பேட்டரி பேக் காரின் பக்கவாட்டில் இருந்தே பார்க்க முடிகிறது. ப்ரோடோடைப் மாடலில் சார்ஜிங் போர்ட் என்ஜின் வைக்கப்படும் இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இறுதி வெர்ஷனில் சார்ஜிங் போர்ட் ஃபெண்டர் அல்லது முன்புற கிரில் அருகில் தனியே வழங்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

புதிய கிரெட்டா EV மாடல் E-GMP ஆர்கிடெக்ச்சரின் ரி-என்ஜினீயர்டு வெர்ஷனை தழுவி உருவாக்கப்படும் என்றே தெரிகிறது. கிரெட்டா EV மாடல் இந்திய சாலை நிலைகளுக்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. கிரெட்டா EV மாடல் அடுத்த ஆண்டு அல்லது 2025 துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் புதிய தலைமுறை வெர்னா செடான் மாடலை அறிமுகம் செய்தது. தற்போது முற்றிலும் புதிய மைக்ரோ எஸ்யுவி மாடலை எக்ஸ்டர் எனும் பெயரில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் வென்யூ காரின் கீழ் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலில் 1.2 லிட்டர் அல்லது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இந்தியாவில் அனைத்து ஹூண்டாய் கார்களையும் பிஎஸ்6 2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார்கள் E20 எரிபொருளில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது.

Photo courtesy: Rushlane

Tags:    

Similar News