இது புதுசு

இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படும் ஃபோர்டு ரேஞ்சர்

Published On 2024-03-08 12:52 GMT   |   Update On 2024-03-08 12:52 GMT
  • ஃபோர்டு எவரஸ்ட் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • டொயோட்டா ஹிலக்ஸ், இசுசு டி மேக்ஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

ஃபோர்டு நிறுவனத்தின் முற்றிலும் புதிய ரேஞ்சர் மாடல் இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படுகிறது. இந்த கார் டிரக் ஒன்றின் மீது எடுத்துச் செல்லப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இத்துடன் ஃபோர்டு என்டேவர் மாடலும் காணப்பட்டது. இதே கார் சர்வதேச சந்தையில் ஃபோர்டு எவரஸ்ட் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இரு மாடல்களும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்பட்டுள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் ரேஞ்சர் மாடல் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படும் பிரபல எஸ்.யு.வி. ஆகும். இந்த மாடல் டொயோட்டா ஹிலக்ஸ் மற்றும் இசுசு டி மேக்ஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

 


இந்த எஸ்.யு.வி. பெட்ரோல், டீசல் என இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரின் ரேப்டர் பெர்ஃபார்மன்ஸ் வேரியண்டில் உள்ள 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் 288 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

ரேஞ்சர் எஸ்.யு.வி. மாடல் இதுவரை இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டதே இல்லை. எனினும், இந்த மாடலின் தோற்றம் கிட்டத்தட்ட ஃபோர்டு என்டேவர் எஸ்.யு.வி.-யை போன்றே காட்சியளிக்கிறது. ஒருவேளை இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் டொயோட்டா ஹிலக்ஸ் மற்றும் இசுசு டி மேக்ஸ் மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும்.

Tags:    

Similar News