Hyundai Verna | அசத்தல் அப்டேட்களுடன் அறிமுகமான வெர்னா ஃபேஸ்லிஃப்ட்
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனது இந்திய சந்தையில் தனது அதிகம் பிரபலமான செடான்- வெர்னா மாடலை அப்டேட் செய்ததது. வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2026 வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் வெளியாகி இருக்கிறது.
புதிய 2026 வெர்னா மாடல் ரூ. 10.98 லட்சம் எனும் துவக்க விலையில் விற்பனைக்கு வருகிறது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இன்டீரியர் மற்றும் வெளிப்புறங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிய ஃபேஸ்லிஃப்ட் கார்- இந்த பிரிவில் பல்வேறு முதல் முறை அம்சங்களுடன் வருகிறது.
மேம்பட்ட வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல்- HX2, HX4, HX6, HX8 மற்றும் HX19 என மொத்தம் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார்-1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் மேனுவல், ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் புதிய வெர்னா மாடல்- கிளாஸி புளூ மற்றும் கிரே மேட் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.
வெளிப்புறத்தில் இந்த கார் பிளாக் க்ரோம் ரேடியேட்டர் கிரில், டூயல் எல்.இ.டி. ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ரீ-டிசைன் செய்யப்பட்ட பம்ப்பர்கள், 16-இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. உள்புறத்தில் இந்த கார் அதிக மாற்றங்களுடன் வருகிறது. அதன்படி மேம்பட்ட ஹூண்டாய் லோகோ கொண்ட முற்றிலும் புதிய ஸ்டீரியங் வீல், லெதர் இருக்கை மேற்கவர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் எட்டு வழிகளில் பவர் அட்ஜஸ்ட் வசதி கொண்ட டிரைவர் சீட், ஓட்டுநர் அருகில் உள்ள இருக்கைகளை நான்கு வழிகளில் அட்ஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காரின் ஓட்டுநர் இருக்கைக்கு வெல்கம் அம்சத்துடன் மெமரி ஃபங்ஷன், முன்பக்கம் ஓட்டுநர் தவிர்த்த இரண்டாவது இருக்கைக்கு எலெக்ட்ரிக் வாக்-இன் டிவைஸ், ரியர் வின்டோ சன்ஷேடு, டேஷ்கேம், ஏழு ஏர்பேக் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
மற்ற அம்சங்களை பொருத்தவரை சரவுண்ட்-வியூ கேமரா, லெவல் 2 ADAS சூட், முன்பக்க வென்டிலேட்டெட் இருக்கைகள, 8-ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.