இது புதுசு

விரைவில் இந்தியா வரும் பொலிரோ எலெக்ட்ரிக் பிக்கப்-டிரக் - அசத்தல் டீசர் வெளியீடு

Update: 2022-08-02 10:32 GMT
  • மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது.
  • சமீபத்தில் மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக பிரிட்டன் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது.

இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா தனது பொலிரோ பிக்கப் டிரக்-இன் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் டீசர் வெளியாகி உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பொலிரோ பிக்கப் டிரக் எலெக்ட்ரிக் வெர்ஷனுக்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.

டீசர் வீடியோவின் படி எலெக்ட்ரிக் பொலிரோ பிக்கப் டிரக் முழுக்க லைட்டிங் செய்யப்பட்டு சில பாகங்கள் மட்டும் காட்சியளிக்கிறது. இதன் டிசைன் அம்சங்கள் நீல நிற லைட்டிங் கொண்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் பொலிரோ போன்றே இருக்கிறது. இதில் சதுரங்க வடிவம் கொண்ட ஹெட்லைட் வழங்கப்படுகிறது.


மேலும் இந்த வாகனத்தில் பழைய மஹிந்திரா லோகோ இடம்பெற்று இருக்கிறது. புது எலெக்ட்ரிக் பொலிரோ மாடல் பிக்கப் வாகனங்களின் எதிர்காலம் என டீசரில் குறிப்பிடப்பட்டு உள்ளது. புது பொலிரோ பிக்கப் எலெக்ட்ரிக் மாடல் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன.

தற்போது மஹிந்திரா நிறுவனம் ஐந்து எலெக்ட்ரிக் வாகனங்களை பயணிகள் வாகன பிரிவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புது எலெக்ட்ரிக் வாகனங்கள் EV கோ நிறுவனத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட உள்ளன. பயணிகள் வாகனம் மட்டுமின்றி பிக்கப் டிரக் மற்றும் வர்த்தக வாகனங்களையும் எலெக்ட்ரிக் வடிவில் உருவாக்கும் பணிகளை மஹிந்திரா துவங்கி விட்டது. அந்த வரிசையில், பொலிரோ பிக்கப் டிரக் எலெக்ட்ரிக், வர்த்தக பிரிவில் முதல் எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும்.

Tags:    

Similar News