இது புதுசு

டிசம்பரில் மூன்று புது கார்கள் - பிஎம்டபிள்யூ அதிரடி!

Published On 2022-11-22 10:50 GMT   |   Update On 2022-11-22 10:50 GMT
  • பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் புது கார்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
  • புது கார்களின் அம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் இவற்றின் விலை விவரங்கள் வெளியாகின்றன.

பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் X7 ஃபேஸ்லிஃப்ட், புதிய XM மற்றும் மேம்பட்ட M340i எக்ஸ்-டிரைவ் மாடல்களை டிசம்பர் 10 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய XM பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இரண்டாவது பிஸ்போக் பிஎம்டபிள்யூ M மாடல் ஆகும். இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் மாடலாக விற்பனைக்கு வர இருக்கிறது. X7 ஃபேஸ்லிஃப்ட் மற்றும் M340i எக்ஸ்-டிரைவ் மாடல்களில் மேம்பட்ட பவர்டிரெயின் மற்றும் அம்சங்கள் வழங்கப்பட உள்ளன.

அதிக மாற்றங்களை பெற்று இருக்கும் மேம்பட்ட X7 ஆடம்பர எஸ்யுவி மாடல் இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் முன்புற தோற்றம் அதிகளவு மாற்றப்பட்டு இருக்கிறது. இதில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய ஸ்ப்லிட் ரக ஹெட்லேம்ப் டிசைன் உள்ளது. இதே போன்ற செட்டப் புதிய i7 மற்றும் 7 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது.

இந்த மாடல்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. காரின் உள்புறத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய வளைந்த இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 14.9 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட ஐடிரைவ் 8 மென்பொருள் வழங்கப்படுகிறது. இதே போன்ற செட்டப் முன்னதாக iX மற்றும் i4 மாடல்களில் வழங்கப்பட்டு இருந்தது.

இந்திய சந்தையில் Xக்ஷ மாடல் எக்ஸ்-டிரைவ் 40i மற்றும் எக்ஸ்-டிரைவ் 30d என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவற்றில் முறையே 380 ஹெச்பி பவர் கொண்ட 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 352 ஹெச்பி பவர் கொண்ட இன்லைன் 6 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இரு என்ஜின்களுடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், ஆல்-வீல் டிரைவ் வசதி வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News