ஆட்டோமொபைல்
ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ்

விரைவில் இந்தியா வரும் ஹார்லி ஸ்போர்ட்ஸ்டர் எஸ்

Published On 2021-11-20 10:15 GMT   |   Update On 2021-11-20 10:15 GMT
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனம் புதிய ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. டிசம்பர் 4-5 தேதிகளில் நடைபெற இருக்கும் இந்தியா பைக் வார நிகழ்வில் புதிய ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

ஏற்கனவே இந்த மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மாடலில் ஆப்லங்-வடிவ ஹெட்லேம்ப், காம்பேக்ட் முன்புற பெண்டர், 11.8 லிட்டர் பியூவல் டேன்க், டால்-சீட் எக்சாஸ்ட்கள் உள்ளன.



இந்தியாவில் புதிய ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிள் விவிட் பிளாக், மிட்நைட் க்ரிம்சன் மற்றும் ஸ்டோன் வாஷ்டு வைட் பியல் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் 1250சிசி, லிக்விட் கூல்டு, 60-டிகிரி, வி ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இந்த என்ஜின் 119.3 பி.ஹெச்.பி. திறன், 127.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் ஐந்து ரைடிங் மோட்கள், கார்னெரிங் ஏ.பி.எஸ்., லீன்-சென்சிடிவ் டிராக்‌ஷன் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் உள்ளன. 

Tags:    

Similar News