null
480 கி.மீ. ரேஞ்ச், அட்டகாசமான டிசைன்... வெளியீட்டுக்கு தயாரான வால்வோ எலெக்ட்ரிக் கார்
- டேஷ்போர்டில் டிரைவர் டிஸ்ப்ளே, புதிய ஸ்டீயரிங் வீல் நேர்த்தியான அமைப்பை வழங்குகிறது.
- வாகனத்தின் சார்ஜிங் போர்ட் பின்புறம் இடதுபுற பேனலில் அமைந்துள்ளது.
வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம், EX30 எலெக்ட்ரிக் SUV-யை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. வால்வோவின் மின்சார வாகனம் சில காலமாகவே விற்பனையில் உள்ளது. இருப்பினும், வரவிருக்கும் எலெக்ட்ரிக் கார்களின் வெளியீட்டைக் குறிக்கும் வகையில், இந்த நிறுவனம் வெளியிட்ட முதல் டீசர்களில் இதுவும் ஒன்றாகும். இந்த EV ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ளது மற்றும் இந்தியாவில் CKD யூனிட்களாக விற்கப்படும். அறிமுகம் செய்யப்பட்டதும், அது EX40 மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படும்.
புதிய வால்வோ EX30 தோற்றத்தில், வால்வோ வடிவமைப்பு மொழியைப் பின்பற்றுகிறது. இது ஒரு நேர்த்தியான அழகியலை வெளிப்படுத்துகிறது. இதில் பிளான்க்டு-ஆஃப் கிரில், LED ஹெட்லைட்கள், தோர் ஹேமர் டே-டைம் ரன்னிங் லைட்கள், பிக்சலேட்டெட் டெயில் லைட்கள் மற்றும் EVகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஏரோடைனமிக் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. வாகனத்தின் சார்ஜிங் போர்ட் பின்புறம் இடதுபுற பேனலில் அமைந்துள்ளது.
உள்புறத்தில் கூகுள் சார்ந்து இயங்கும் 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, அத்துடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வழங்கப்படுகிறது. டேஷ்போர்டில் டிரைவர் டிஸ்ப்ளே, புதிய ஸ்டீயரிங் வீல் நேர்த்தியான அமைப்பை வழங்குகிறது. புதிய வால்வோ EX30 மாடலில் 360-டிகிரி கேமரா, ஏராளமான ஏர்பேக்குகள் மற்றும் லேன்-கீப்பிங் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற ADAS (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ்) உள்ளிட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.
கீலியின் SEA பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்ட வால்வோ EX30, முறையே 344 கிலோமீட்டர்கள் மற்றும் 480 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும் இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் வருகிறது. இருப்பினும், சர்வதேச சந்தையில், இதே கார் மூன்று விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரின் ஒற்றை-மோட்டார் வேரியண்ட் 268 ஹெச்பி பவர் மற்றும் 343 நியூட்டன் மீட்டர் டார்க்கை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் இரட்டை-மோட்டார் வேரியண்ட் 422 ஹெச்பி பவர் மற்றும் 543 நியூட்டன் மீட்டர் டார்க்கை வழங்குகிறது.
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதும், புதிய வால்வோ EX30 மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் EQA, ஹூண்டாய் ஐயோனிக் 5, பிஓய்டி Sealion 7 மற்றும் பிஎம்டபிள்யூ iX1 போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும்.