கார்

ரூ. 7 லட்சம் பட்ஜெட்டில் அறிமுகமான டெய்சர் - சூப்பர் அப்டேட் கொடுத்த டொயோட்டா

Published On 2024-04-04 09:26 GMT   |   Update On 2024-04-04 09:26 GMT
  • துவக்க விலை ரூ. 7 லட்சத்து 73 ஆயிரம், என்று நிர்ணயம்.
  • இந்த கார் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

டொயோட்டா இந்தியா நிறுவனம் மாருதி ஃபிரான்க்ஸ் மாடலின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட "டெய்சர்" மாடலை இந்திய சந்தையில் நேற்று (ஏப்ரல் 3) அறிமுகம் செய்தது. E, S, S+, G, மற்றும் V என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கும் டொயோட்டா டெய்சர் துவக்க விலை ரூ. 7 லட்சத்து 73 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய டொயோட்டா டெய்சர் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். இந்த காரின் வினியோகம் மே மாதம் துவங்கும் என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 


புதிய டெய்சர் மாடல்- லுசென்ட் ஆரஞ்சு, ஸ்போர்டின் ரெட், கஃபே வைட், என்டைசிங் சில்வர், கேமிங் கிரே, ஸ்போர்டின் ரெட்-மிட்நைட் பிளாக் ரூஃப், என்டைசிங் சில்வர்- மிட்நைட் பிளாக் ரூஃப் மற்றும் கஃபே வைட்-மிட்நைட் பிளாக் ரூஃப் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

இந்த காரில் ஒன்பது இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, ஹெட்-அப் டிஸ்ப்ளே, ஆட்டோ டிம்மிங் IRVM, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங்கில் மவுன்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் வழங்கப்படுகின்றன.

பாதுகாப்பிற்கு ஆறு ஏர்பேக், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஏபிஎஸ் மற்றும் இபிடி, ரியர் டிஃபாகர், ஐசோஃபிக்ஸ் மவுன்ட்கள், வெஹிகில் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் பார்க்கிங் கேமரா சென்சார்கள் வழங்கப்படுகின்றன.

பவர்டிரெயினை பொருத்தவரை டொயோட்டா டெய்சர் மாடலில் 1.2 லிட்டர் NA பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் CNG கிட் ஆப்ஷனும் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட் உடன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல், 5 ஸ்பீடு AMT, 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News