கார்

புதிய இன்னோவா ஹைகிராஸ் வாங்க இவ்வளவு நாள் காத்திருக்கனுமா? வெளியான தகவல்

Published On 2023-06-17 06:02 GMT   |   Update On 2023-06-17 06:02 GMT
  • டொயோட்டா நிறுவனத்தின் ஹைகிராஸ் மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
  • இந்தியாவில் இன்னோவா ஹைகிராஸ் மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் பெட்ரோல் மற்றும் பெட்ரோல் ஹைப்ரிட் என இருவித வெர்ஷன்களில் மட்டுமே கிடைக்கிறது. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடல் G-Slf, GX, VX ஹைப்ரிட், VX(O) ஹைப்ரிட், ZX ஹைப்ரிட் மற்றும் ZX(O) ஹைப்ரிட் என மொத்தம் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

இந்திய சந்தையில் புதிய இன்னோவா ஹைகிராஸ் விலை ரூ. 18 லட்சத்து 55 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. அறிமுகம் செய்யப்பட்டதும் அதிக பிரபலமடைந்த இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி-யின் காத்திருப்பு காலம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதன்படி புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலை வாங்குவோர் அதன் ஹைப்ரிட் வெர்ஷன்களை டெலிவரி எடுக்க 100 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் பெட்ரோல் வெர்ஷன்களை பெற முன்பதிவு செய்ததில் இருந்து 30 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

இதனிடையே மாருதி சுசுகி நிறுவனம் ஹைகிராஸ் மாடலை சார்ந்து புதிய எம்பிவி மாடலை உருவாக்கி இருக்கிறது. மாருதி சுசுகி எம்பிவி மாடல் இன்விக்டோ என்று அழைக்கப்படுகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு அடுத்த வாரம் துவங்குகிறது. விலை மற்றும் வினியோக விவரங்கள் ஜூலை 5-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

Tags:    

Similar News