கார்

இந்தியாவில் அறிமுகமான புதிய இன்னோவா ஹைகிராஸ் - முன்பதிவு துவக்கம்!

Update: 2022-11-25 09:29 GMT
  • டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் மாடல் லிட்டருக்கு 21.1 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
  • புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

டொயோட்டா நிறுவனத்தின் 2023 இன்னோவா ஹைகிராஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் வெளியிடப்பட இருக்கிறது. புதிய தலைமுறை இன்னோவா மாடல் மோனோக் சேசிஸ் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் முன்புற டிரைவ் லே-அவுட் கொண்டுள்ளது.

இன்னோவா ஹைகிராஸ் மாடலின் முன்பதிவு துவங்கிவிட்டது. முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும். இதன் விற்பனை 2023 ஜனவரி மாத மத்தியில் துவங்க இருக்கிறது. இந்த கார் இருவித பெட்ரோல், மூன்று வித பெட்ரோல் ஹைப்ரிட் வெர்ஷன்களில் கிடைக்கிறது. மேலும் இந்த கார் ஏழு மற்றும் எட்டு பேர் பயணம் செய்யும் இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.

2023 டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 172 ஹெச்பி பவர், 187 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுகத்துகிறது. இத்துடன் மைல்டு ஹைப்ரிட் மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கிறது. இது 111 ஹெச்பி பவர், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT, E-CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 9.5 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் லிட்டருக்கு 21.1 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. மேலும் காரின் ஃபியூவல் டேன்க்-ஐ முழுமையாக நிரப்பினால் 1097 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என டொயோட்டா தெரிவித்து இருக்கிறது. இந்த காரின் அளவீடுகள் 4755 மில்லிமீட்டர் நீளம், 1850 மில்லிமீட்டர் அகலம், 1795 மில்லிமீட்டர் உயரம், வீல்பேஸ் 2850 மில்லிமீட்டராக உள்ளது.

புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலில், முற்றிலும் புதிய முன்புற தோற்றம் கொண்டுள்ளது. இந்த காரில் புதிய முன்புற கிரில், க்ரோம் அண்டர்லைன், ஸ்வெப்ட்பேக் எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய முன்புற பம்ப்பர், எல்இடி ஃபாக் லைட்களை கொண்டிருக்கிறது. இதன் முன்புற கதவுகளில் ஹைப்ரிட் பேட்ஜிங் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் 18 இன்ச் அளவில் அலாய் வீல்கள், பிளாக்டு அவுட் B மற்றும் C பில்லர்கள், பாடி கிலாடிங் வழங்கப்பட்டுள்ளது.

பின்புறம் டூ-பீஸ் எல்இடி டெயில் லைட்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, புதிய பின்புற பம்ப்பர், இண்டகிரேட் செய்யப்பட்ட ரிஃப்ளெக்டர்கள், டெயில்-கேட்டில் மவுண்ட் செய்யப்பட்ட நம்பர் பிளேட் ரிசெஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார்- சூப்பர் வைட், பிலாட்டினம் வைட் பியல், சில்வர் மெட்டாலிக், அட்டிட்யூட் பிளாக் மைகா, ஸ்பார்க்லிங் பிளாக் பியல் க்ரிஸ்டல், ஷைன், அவாண்ட்கார்ட் பிரான்ஸ் மெட்டாலிக் மற்றும் பிளாகிஷ் அகெஹா கிலாஸ் ஃபிளேக் என ஏழு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

காரின் உள்புறம் பானரோமிக் சன்ரூஃப், 10.1 இன்ச் ஃபுளோடிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், மல்டி-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 9 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜெபிஎல் மியூசிக் சிஸ்டம், டூயல் டோன் பிலாக்-பிரவுன் தீம், ஏசி-க்கு டிஜிட்டல் கண்ட்ரோல், புதிய ஸ்டீரிங் வீல், இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், குரூயிஸ் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் பார்கிங் பிரேக், ஆம்பியண்ட் லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் ADAS, டொயோட்டா i-கனெக்ட், கேப்டன் இருக்கைகள், ரூஃப் மவுண்ட் செய்யப்பட்ட ஏசி வெண்ட்கள், ரிக்லைனிங் 2-ரோ இருக்கைகள், இரண்டாம் அடுக்கு இருக்கையில் அமர்வோருக்காக 2 ஸ்கிரீன், பவர்டு டெயில்கேட், 6 ஏர்பேக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News