கார்

கார் மாடல்கள் விலையை மாற்றிய டொயோட்டா

Update: 2022-10-03 13:03 GMT
  • டொயோட்டா நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை இந்திய சந்தையில் மாற்றப்பட்டு இருக்கிறது.
  • விலை மாற்றம் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவை ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது. இம்முறை டொயோட்டா கார் மாடல்கள் விலை ரூ. 11 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் ஒற்றை வேரியண்டில் கிடைக்கும் டொயோட்டா வெல்ஃபயர் மாடலின் விலை தற்போது ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து டொயோட்டா கேம்ரி மாடலுக்கு ரூ. 90 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா பார்ச்சூனர் மாடலின் வேரியண்ட்களுக்கு ஏற்ப ரூ. 19 ஆயிரத்தில் துவங்கி ரூ. 77 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதேபோன்று இன்னோவா க்ரிஸ்டா விலை ரூ. 11 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 23 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.

விலை உயர்வு தவிர டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் தான் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மிட்-சைஸ் எஸ்யுவி-யை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து புதிய கிளான்சா மாடலின் CNG வேரியண்டை அறிமுகம் செய்ய டொயோட்டா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்தியாவில் புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் விலை ரூ. 10 லட்சத்து 48 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த கார் மைல்டு மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் என இரண்டு வித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

Tags:    

Similar News