கார்

இன்னோவா க்ரிஸ்டா டீசல் முன்பதிவு - இணையத்தில் லீக் ஆன சூப்பர் தகவல்

Published On 2022-11-16 10:13 GMT   |   Update On 2022-11-16 10:13 GMT
  • டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா க்ரிஸ்டா மாடல் இந்திய சந்தையில் அமோக விற்பனையை பதிவு செய்து வருகிறது.
  • இதுதவிர புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் டொயோட்டா ஈடுபட்டு வருகிறது.

டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்ரிஸ்டா டீசல் வேரியண்ட்களின் முன்பதிவை சமீபத்தில் நிறுத்தியது. இதைத் தொடர்ந்து டீசல் வாகனங்கள் விற்பனையை டொயோட்டா நிறுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகின. எனினும், இதுபற்றி டொயோட்டா தரப்பில் எந்த தகவலோ, விளக்கமோ வழங்கப்படவில்லை. தொடர்ச்சியான வரவேற்பு காரணமாக முன்பதிவு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், தற்போது இந்த தகவல் தான் உண்மையான காரணம் என தெரியவந்துள்ளது. சில விற்பனையாளர்கள் இன்னோவா டீசல் வேரியண்டிற்கான முன்பதிவு விரைவில் துவங்கும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இன்னோவா க்ரிஸ்டா ZX வேரியண்டில் மட்டும் தான் டீசல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த முறை டீசல் கார்களின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்படும் என்றும் இவை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் விற்பனையகங்களுக்கு வந்து சேரும் என்றும் கூறப்படுகிறது. இன்னோவா டீசல் வேரியண்ட் வாங்க திட்டமிடுவோருக்கு இந்த தகவல் சற்று ஆறுதலாக இருக்கும்.

அடுத்த தலைமுறை இன்னோவா ஹைகிராஸ் மாடல் பெட்ரோல் மற்றும் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின்களை மட்டுமே கொண்டிருக்கும். புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலுக்கான முன்பதிவு நவம்பர் 25 ஆம் தேதி துவங்கும் என கூறப்படுகிறது. இதன் வினியோகம் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Tags:    

Similar News