கார்

புதிய ஹைரைடர் முழு விலை விவரங்களை அறிவித்த டொயோட்டா

Published On 2022-09-28 09:52 GMT   |   Update On 2022-09-28 09:52 GMT
  • டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஹைரைடர் மாடலை ஏற்கனவே அறிமுகம் செய்து விட்டது.
  • புதிய ஹைரைடர் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

டொயோட்டா நிறுவனம் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலின் E, S, G மற்றும் V மைல்டு ஹைப்ரிட் வேரியண்ட்கள் விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய டொயோட்டா ஹைரைடர் மைல்டு ஹைப்ரிட் வேரியண்ட் விலை ரூ. 10 லட்சத்து 48 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 17 லட்சத்து 19 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

முன்னதாக டொயோட்டா ஹைரைடர் ஸ்டிராங் ஹைப்ரிட் வேரியண்ட்களின் விலை செப்டம்பர் 09 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. டொயோட்டா ஹைரைடர் காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

டொயோட்டா ஹைரைடர் விலை விவரங்கள்:

ஹைரைடர் E மைல்டு ஹைப்ரிட் MT ரூ. 10 லட்சத்து 48 ஆயிரம்

ஹைரைடர் S மைல்டு ஹைப்ரிட் MT ரூ. 12 லட்சத்து 28 ஆயிரம்

ஹைரைடர் S மைல்டு ஹைப்ரிட் AT ரூ. 13 லட்சத்து 48 ஆயிரம்

ஹைரைடர் S ஸ்டிராங் ஹைப்ரிட் eCVT ரூ. 15 லட்சத்து 11 ஆயிரம்

ஹைரைடர் G மைல்டு ஹைப்ரிட் MT ரூ. 14 லட்சத்து 34 ஆயிரம்

ஹைரைடர் G மைல்டு ஹைப்ரிட் AT ரூ. 15 லட்சத்து 54 ஆயிரம்

ஹைரைடர் G ஸ்டிராங் ஹைப்ரிட் eCVT ரூ. 17 லட்சத்து 49 ஆயிரம்

ஹைரைடர் V மைல்டு ஹைப்ரிட் MT ரூ. 15 லட்சத்து 89 ஆயிரம்

ஹைரைடர் V மைல்டு ஹைப்ரிட் AT ரூ. 17 லட்சத்து 09 ஆயிரம்

ஹைரைடர் V மைல்டு ஹைப்ரிட் MT AWD ரூ. 17 லட்சத்து 19 ஆயிரம்

ஹைரைடர் V ஸ்டிராங் ஹைப்ரிட் eCVT ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம்

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

புதிய டொயோட்டா ஹைரைடர் மைல்டு ஹைப்ரிட் மாடலில் 1.5 லிட்டர் K15C என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்பி பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

இந்திய சந்தையில் புதிய ஹைரைடர் மாடல்- E, S, G மற்றும் V என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் AWD வசதி மைல்டு ஹைப்ரிட் V மேனுவல் வேரியண்டில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடலில் பானரோமிக் சன்ரூப், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

Tags:    

Similar News