கார்

கார் விபத்துகளுக்கு காரணம் டச் ஸ்கிரீன்கள் தான்.. கட்டுப்பாடுகளை விதிக்கும் யூரோ என்கேப்

Published On 2024-03-07 10:49 GMT   |   Update On 2024-03-07 10:49 GMT
  • அம்சங்களை இயக்குவதற்கு டச் கண்ட்ரோல்களையே வழங்குகின்றன.
  • செலவீனமும் குறையும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஆட்டோமொபைல் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்களின் வரவு காரணமாக கார் உற்பத்தியாளர்கள் தங்களது மாடல்களில்- அளவில் பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்கள், டிஜிட்டல் காக்பிட் மற்றும் ஏராளமான டச் கண்ட்ரோல்களை வழங்குகின்றன. இதன் காரணமாக கார்களின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஏராளமான பட்டன்கள் காணாமல் போயின.

பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து, ஓட்டுநர்கள் கவனம் சிதறுவதை தடுக்கும் வகையில் யூரோ என்கேப் (NCAP) புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவரும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய விதிகளின் படி ஐந்து நட்சத்திர குறியீட்டை பெறுவதற்கு கார்களின் டர்ன் சிக்னல்கள், வைப்பர் உள்ளிட்டவைகளை இயக்க கட்டாயமாக பட்டன்களை வழங்க வேண்டும்.

 


கார் உற்பத்தியாளர்கள் டர்ன் சிக்னல்கள், ஹாரன், வைப்பர்கள், எச்சரிக்கை மின்விளக்கை இயக்குவது, அவசர அழைப்புகளை மேற்கொள்வது போன்ற வசதிகளை இயக்க பட்டன்கள் மற்றும் டயல்களை வைத்துள்ளன. எனினும், டெஸ்லா, வோக்ஸ்வேகன் போன்ற கார் உற்பத்தியாளர்கள் பல்வேறு அம்சங்களை இயக்குவதற்கு டச் கண்ட்ரோல்களையே வழங்குகின்றனர்.

இவ்வாறு செய்யும் போது இன்ஃபோடெயின்மென்டிலேயே பல்வேறு வசதிகளும் வழங்கப்படுகின்றன. வழக்கமான கண்ட்ரோல்களை வழங்குவதை விட அதிநவீன டச் ஸ்கிரீன்களை பயன்படுத்தும் போது செலவீனமும் குறையும் என புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

"அதிகளவில் தொடுதிரை பயன்படுத்துவது சந்தை முழுக்க பிரச்சினையை ஏற்படுத்துகிறது. கிட்டத்தட்ட அனைத்து வாகன உற்பத்தியாளரும் சென்ட்ரல் டச் ஸ்கிரீன்களில் மிக முக்கிய கண்ட்ரோல்களை வழங்குகின்றன. இதன் காரணமாக ஓட்டுநரின் கவனம் சிதைந்து, விபத்துகள் ஏற்படும் ஆபத்தை அதிகப்படுத்துகிறது," என யூரோ என்கேப் திட்ட அதிகாரி மேத்யூ அவெரி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News