கார்

ஜனவரியில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் பட்டியல் - முதலிடத்தில் எந்த மாடல் தெரியுமா?

Published On 2024-02-16 10:41 GMT   |   Update On 2024-02-16 10:41 GMT
  • முந்தைய மாதத்தை விட 37 சதவீதம் அதிகம் ஆகும்.
  • அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலிலும் பிரதிபலித்துள்ளது.

இந்திய பயணிகள் வாகன சந்தைக்கு 2024 ஆண்டின் முதல் மாதம் நல்லவிதமாக அமைந்துள்ளது. 2024 ஜனவரி மாதத்தில் மட்டும் இந்திய சந்தையில் மொத்தம் 3 லட்சத்து 93 ஆயிரத்து 471 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை விட 14 சதவீதமும், அதற்கும் முந்தைய மாதத்தை விட 37 சதவீதமும் அதிகம் ஆகும். வாகனங்கள் விற்பனையானது டாப் 10 அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலிலும் பிரதிபலித்துள்ளது.

அந்த வகையில், ஜனவரி 2024 மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

மாதாந்திர விற்பனை விவரம்:

மாருதி சுசுகி பலேனோ 19 ஆயிரத்து 630 யூனிட்கள்

டாடா பன்ச் 17 ஆயிரத்து 978 யூனிட்கள்

மாருதி சுசுகி வேகன்ஆர் 17 ஆயிரத்து 756 யூனிட்கள்

டாடா நெக்சான் 17 ஆயிரத்து 182 யூனிட்கள்

மாருதி சுசுகி டிசையர் 16 ஆயிரத்து 773 யூனிட்கள்

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 15 ஆயிரத்து 370 யூனிட்கள்

மாருதி சுசுகி பிரெஸ்ஸா 15 ஆயிரத்து 303 யூனிட்கள்

மாருதி சுசுகி எர்டிகா 14 ஆயிரத்து 632 யூனிட்கள்

மஹிந்திரா ஸ்கார்பியோ 14 ஆயிரத்து 293 யூனிட்கள்

மாருதி சுசுகி ஃபிரான்க்ஸ் 13 ஆயிரத்து 643 யூனிட்கள்

Tags:    

Similar News