கார்

டெஸ்டிங்கிற்கு தயாராகும் டாடா பன்ச் EV

Published On 2023-05-17 11:16 GMT   |   Update On 2023-05-17 11:16 GMT
  • காரின் முன்புறம் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப், எல்இடி டிஆர்எல் பொனெட் லைனின் கீழ் பொருத்தப்பட்டு உள்ளது.
  • காரின் பின்புறம் ரியர் வைப்பர், ஹை மவுண்ட் ஸ்டாப் லேம்ப், எல்இடி டிரை-ஏரோ டெயில் லைட்கள் உள்ளன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் மாடல் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், வாகனத்தில் ஏற்றிச் செல்லப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த மாடல் டாடா பன்ச் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

2025 ஆண்டிற்குள் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பத்து எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் டாடா பன்ச் EV மாடலும் இடம்பெற்று இருக்கும் என்று கூறப்படுகிறது. தோற்றத்தில் இந்த மாடல் அதன் ஐசி என்ஜின் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கும் என்று தெரிகிறது.

 

இந்த காரின் முன்புறம் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப், எல்இடி டிஆர்எல் பொனெட் லைனின் கீழ் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த காரின் கிரில் பகுதி ரிடிசைன் செய்யப்பட்டு, முழுமையாக பிளான்க்டு ஆஃப் செய்யப்பட்டு EV பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது. காரின் பின்புறம் ரியர் வைப்பர், ஹை மவுண்ட் ஸ்டாப் லேம்ப், எல்இடி டிரை-ஏரோ டெயில் லைட்கள் உள்ளன.

முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டிகோர், டியாகோ மற்றும் நெக்சான் ஐசி என்ஜின் கார்களை எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த வரிசையில், தற்போது டாடா பன்ச் மாடலும் இணைய இருக்கிறது. ஸ்பை படங்களின் படி இந்த காரின் பின்புற வீலில் டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது.

பவர்டிரெயின் மற்றும் அம்சங்களின் படி பன்ச் EV மாடல் டியாகோ EV மாடலின் மேல் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது. விலையை பொருத்தவரை டாடா பன்ச் EV மாடல் ரூ. 9 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 13 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

Photo courtesy: photulogy

Tags:    

Similar News