ரூ. 39.99 லட்சம் விலையில் அறிமுகமான ஸ்கோடா கோடியாக் லவுஞ்ச்... என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
- 7 சீட்டுக்கு பதிலாக 5 சீட் மட்டுமே இடம் பெற்றுள்ளதால், 3-வது வரிசை இல்லை.
- 2 வரிசை கொண்ட 5 சீட்டர் கோடியாக் இந்தியாவில் அறிமுகம் ஆவது இதுவே முதல்முறை.
ஸ்கோடா நிறுவனம் 5 சீட்டர் கொண்ட கோடியாக் லவுஞ்ச் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 204 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும். இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உள்ளது.
7 சீட்டுக்கு பதிலாக 5 சீட் மட்டுமே இடம் பெற்றுள்ளதால், 3-வது வரிசை இல்லை. இதனால் பூட் இட வசதி 281 லிட்டரில் இருந்து 786 லிட்டராக அதிகரித்துள்ளது. 2 வரிசை கொண்ட 5 சீட்டர் கோடியாக் இந்தியாவில் அறிமுகம் ஆவது இதுவே முதல்முறை.
9 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பனேரமிக் சன்ரூப், டூயல் வயர்லெஸ் சார்ஜர், 9 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை இதில் இடம் பெற்றுள்ளன. இந்த காரின் விலை ரூ.39.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
இதுதவிர, இதே என்ஜின் திறன் கொண்ட ஸ்போர்ட் லைன் ரூ.43.76 லட்சம் என்றும் எல் அண்ட் கே சுமார் ரூ.45.96 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.