கார்

500 கிமீ ரேன்ஜ் கொண்ட ஓலா எலெக்ட்ரிக் கார் - வெளியீடு எப்போ தெரியுமா?

Update: 2022-08-16 04:10 GMT
  • ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிதாக எலெக்ட்ரிக் கார் உருவாக்கி வருவதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி விட்டது.
  • மேலும் இந்த எலெக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவலையும் ஓலா அறிவித்து இருக்கிறது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஆன்லைன் நிகழ்ச்சி மூலம் ஓலா S1 மாடலுக்கான முன்பதிவுகளை நேற்று (ஆகஸ்ட் 15) துவங்கி இருந்தது. மேலும் எலெக்ட்ரிக் கார் மாடல் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் அறிவித்து இருக்கிறது. இந்த கார் இந்திய சந்தையில் அதிவேகமான கார் மாடலாக இருக்கும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார்.

அந்த வகையில் ஓலா எலெக்ட்ரிக் கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை நான்கே நொடிகளில் எட்டிவிடும் என்றும் இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 500 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தியாவில் உருவாக்கப்பட்டதிலேயே தலைசிறந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக இது இருக்கும் என அவர் தெரிவித்தார். இந்த கார் ஆல் கிளாஸ் ரூஃப் மற்றும் சிறப்பான டிராக் கோ-எபிஷியண்ட் வழங்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது.


இந்த கார் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சொந்த மூவ் ஓஎஸ் கொண்டிருக்கும். இத்துடன் உலகின் மற்ற கார்களிலும் இல்லாத வகையில் சிறப்பான டிரைவிங் திறன்களை இந்த கார் கொண்டிருக்கும். இதில் கீலெஸ் இயக்கம் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கும். "இது சிறப்பான செயல்திறன், அசத்தல் டிசைன், மிகச் சிறந்த தொழில்நுட்பம் கொண்டிருக்கும்" என பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.

ஓலா எலெக்ட்ரிக் கார் 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இவை தவிர புதிய எலெக்ட்ரிக் கார் விவரங்கள் மர்மமாகவே உள்ளது. கடந்த ஆண்டு ஓலா எலெக்ட்ரிக் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் உலகின் மிகப் பெரிய இருசக்கர வாகன ஆலையாக ஓலா பியுச்சர் பேக்டரி உருவாக்கப்பட்டு வருவதாக அறிவித்து இருந்தார். இந்த ஆலையில் ஆண்டுக்கு பத்து லட்சம் ஸ்கூட்டர்கள், அதாவது ஒவ்வொரு இரு நொடிகளுக்கும் ஒரு ஸ்கூட்டர் வீதம் உற்பத்தி செய்ய முடியும்.

Tags:    

Similar News