கார்

எம்ஜி ஆஸ்டர் விலையில் திடீர் மாற்றம்

Published On 2022-09-18 10:19 GMT   |   Update On 2022-09-18 10:19 GMT
  • எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஆஸ்டர் மாடல் விலையை திடீரென மாற்றி இருக்கிறது.
  • ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களுக்கு போட்டியாக எம்ஜி ஆஸ்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஆஸ்டர் மிட்-சைஸ் எஸ்யுவி விலையை உயர்த்தி இருக்கிறது. புது மாற்றத்தின் படி எம்ஜி ஆஸ்டர் மாடல் விலை ரூ. 10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. விலை உயர்வு எம்ஜி ஆஸ்டர் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.

விலை உயர்வின் படி எம்ஜி ஆஸ்டர் தற்போது ரூ. 10 லட்சத்து 32 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 23 ஆயிரம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் எம்ஜி ஆஸ்டர் மாடல் ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சேவி என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.


எம்ஜி ஆஸ்டர் மாடலில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த என்ஜின்கள் 138 ஹெச்பி பவர், 220 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் 108 ஹெச்பி பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பரீடு மேனுவல் மற்றும் CVT யூனிட்கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களுக்கு போட்டியாக எம்ஜி ஆஸ்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News