கார்

ஜனவரியில் இருந்து புதிய விலை - வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த மாருதி சுசுகி!

Update: 2022-12-03 09:29 GMT
  • மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை மாற்ற திட்டமிட்டுள்ளது.
  • கார் மாடல்களின் புதிய விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை ஜனவரி 2023 முதல் உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு மாருதி சுசுகியின் அனைத்து கார்களுக்கும் பொருந்தும். சர்வதேச அளவில் உதிரிபாகங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, பணவீக்கம் மற்றும் புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் விலை உயர்வு அறிவிக்கப்படுவதாக மாருதி சுசுகி அறிவித்து இருக்கிறது.

விலை உயர்வு ஒவ்வொரு கார் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும். தற்போது மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் மொத்தம் 15 கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இவற்றில் ஆல்டோ மாடல் விலை ரூ. 3 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. மாருதி சுசுகி XL6 மாடல் விலை ரூ. 11 லட்சத்து 29 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் மாருதி சுசுகி நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்தியது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமலுக்கு வர இருக்கும் மாருதி கார்களின் புதிய விலை விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படலாம். முன்னதாக மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பலேனோ மற்றும் XL6 கார்களின் CNG வேரியண்டை அறிமுகம் செய்தது.

புதிய மாருதி சுசுகி பலேனோ CNG மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 28 ஆயிரம் என துவங்குகிறது. புதிய XL6 CNG மாடல் விலை ரூ. 12 லட்சத்து 24 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மாருதி சுசுகியின் எண்ட்ரி லெவல் ஆல்டோ K10 மாடலும் CNG ஆப்ஷனில் கிடைக்கிறது.

Tags:    

Similar News