கார்
null

விற்பனையில் 20 லட்சம் யூனிட்கள் - புதிய மைல்கல் எட்டி அசத்திய மாருதி சுசுகி நெக்சா!

Published On 2023-03-25 13:05 GMT   |   Update On 2023-03-25 13:09 GMT
  • மாருதி சுசுகியின் நெக்சா பிராண்டு இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டி அசத்தியுள்ளது.
  • 2022-23-இல் மாருதியின் ஒட்டுமொத்த விற்பனையில் நெக்சா பிராண்டு 20 சதவீத பங்குகளை எட்டியது.

மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரீமியம் விற்பனை பிரிவான நெக்சா இந்திய விற்பனையில் 20 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது. தற்போது நாட்டின் 280-க்கும் அதிக நகரங்களில் சுமார் 440 விற்பனை மையங்களை நெக்சா கொண்டிருக்கிறது. 2015 ஆம் ஆண்டு 5 சதவீதத்தில் துவங்கி 2022-23 ஆண்டு நெக்சா விற்பனை 20 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

தற்போது இந்திய சந்தையில் இக்னிஸ், பலேனோ, சியாஸ், XL6 மற்றும் கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்கள் நெக்சா பிராண்டிங்கில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றுடன் முற்றிலும் புதிய ஜிம்னி மற்றும் Fronx மாடல்கள் விரைவில் இணைய உள்ளன. இரு மாடல்களும் ஆட்டோ எக்ஸ்போ 2023 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

"வித்தியாசமான அனுபவங்கள், புதுமை-மிக்க, அதநவீன தொழில்நுட்பத்தை வழங்கும் நோக்கில் 2015 வாக்கில் நெக்சா துவங்கப்பட்டது. ஒவ்வொரு நெக்சா வாகனமும் அதிநவீன தொழில்நுட்பம், டிசைன் மற்றும் அம்சங்கள் மூலம் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலேயே உருவாக்கப்பட்டு வருகிறது."

"நெக்சா பிராண்டு 20 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது, வாடிக்கையாளர்கள் எங்களின் உயர் ரக மற்றும் அதிக அம்சங்கள் நிறைந்த வாகனங்கள், பிரீமியம் அனுபவத்திற்கு வழங்கிய அன்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து இருக்கிறது. மாருதி சுசுகியின் ஒட்டுமொத்த விற்பனையில் நெக்சா மட்டும் 20 சதவீத பங்குகளை பெற்றுள்ளது."

"சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஜிம்னி மற்றும் Fronx மாடல்கள் முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இரு மாடல்களை வாங்க இதுவரை சுமார் 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டை நெக்சா பிராண்டு வெற்றிகரமாக நிறைவு செய்யும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறோம்," என மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவு மூத்த நிர்வாக அதிகாரி சஷான்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்து இருக்கிறார். 

Tags:    

Similar News