கார்
null

9 கார் மாடல்களின் விலையை குறைத்த மாருதி!

Published On 2024-06-02 13:03 IST   |   Update On 2024-06-02 13:03:00 IST
  • விலை குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
  • விலைகளைக் குறைப்பதன் மூலம், மாருதி சுசுகி தனது ஏஜிஎஸ் மாடல்களுக்கு அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி நிறுவனம். கடந்த 1986-ம் ஆண்டு முதல் வாகனங்களை ஏற்றுமதி செய்து வரும் மாருதி சுசுகி நிறுவனத்தின் கார்கள் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

தற்போது, மாருதி சுசுகி நிறுவனம் தனது குறிப்பிட்ட சில மாடல் கார்களின் விலையை ரூ.5,000 வரை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


ஆல்ட்டோ K10, S-Presso, செலிரியோ, வேகன்-ஆர், Swift, டிசையர், Baleno, Fronx மற்றும் Ignis உள்ளிட்ட பல மாடல்களுக்கு இந்த விலைக் குறைப்பு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

ஏஜிஎஸ் ரக கார்களை மலிவு விலையில் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக விலை குறைக்கப்பட்டதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

விலைகளைக் குறைப்பதன் மூலம், மாருதி சுசுகி தனது ஏஜிஎஸ் மாடல்களுக்கு அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Tags:    

Similar News