கார்

மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா டெலிவரி அப்டேட்

Published On 2022-10-05 08:59 GMT   |   Update On 2022-10-05 08:59 GMT
  • மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய கிராண்ட் விட்டாரா மாடல் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை சுமார் 57 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய கிராண்ட் விட்டாரா எஸ்யுவி மாடல் வினியோகம் இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஜூலை மாதத்திலேயே இந்த காருக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் முன்பே புதிய கிராண்ட் விட்டாரா மாடலை வாங்க 57 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருந்தனர்.

இதன் காரணமாக புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா ஸ்டிராங் ஹைப்ரிட் மாடலை வாங்க அதிகபட்சமாக எட்டு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. புதிய கிராண்ட் விட்டாரா மைல்டு ஹைப்ரிட் வேரியண்ட் வாங்குவோர் ஐந்து மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். புதிய கிராண்ட் விட்டாரா மாடல் இந்தியாவில் பல்வேறு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இவற்றில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல், மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின்கள் அடங்கும். இத்துடன் மைல்டு ஹைப்ரிட் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஸ்டிராங் ஹைப்ரிட் பவர்டிரெயின் மட்டும் டொயோட்டா நிறுவனம் உருவாக்கியது ஆகும்.

புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மைல்டு ஹைப்ரிட் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 103 பிஎஸ் பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு MT மற்றும் 6 ஸ்பீடு AT ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் லிட்டருக்கு அதிகபட்சம் 21.11 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது.

கிராண்ட் விட்டாரா ஸ்டிராங் ஹைப்ரிட் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 116 பிஎஸ் பவர், 141 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் e-CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் லிட்டருக்கு 27.97 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

Tags:    

Similar News