இது புதுசு
null

வேற லெவலில் மாறிய மஹிந்திரா கார் - வெளியான அசத்தல் டீசர்

Published On 2024-04-04 15:02 GMT   |   Update On 2024-04-04 15:03 GMT
  • பெயர்கள் மாற்றப்படும் என எதிர்பார்க்கலாம்.
  • புதிய ஏ.சி. வெண்ட்கள் வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா நிறுவனம் தனது XUV300 பேஸ்லிப்ட் மாடலுக்கான டீசரை முதல் முறையாக வெளியிட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் சர்வதேச சந்தையில் ஏப்ரல் 29 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

மேம்பட்ட புதிய சப்-4 மீட்டர் எஸ்.யு.வி. மாடலுக்கு மஹிந்திரா XUV 3XO என அந்நிறுவனம் பெயரிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அறிமுகம் செய்யப்படும் ஒட்டுமொத்த XUV மாடல்களும் இதே போன்ற பெயர்கள் மாற்றப்படும் என எதிர்பார்க்கலாம்.

டீசரில் புதிய மஹிந்திரா XUV 3XO மாடலின் முன்புறம் புதிய தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லைட்கள், வட்ட வடிவம் கொண்ட ஃபாக் லேம்ப்கள், எல் வடிவம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், புதிய பேட்டன் கொண்ட கிரில், டூயல் டோன் அலாய் வீல்கள் உள்ளன.

இத்துடன் புதிதாக சி வடிவம் கொண்ட எல்.இ.டி. டெயில் லைட்கள், கனெக்டெட் எல்.இ.டி. லைட் பார், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், பின்புறத்தில் XUV 3XO லெட்டரிங் உள்ளது. இவைதவிர டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், புதிய ஏ.சி. வெண்ட்கள் வழங்கப்படுகின்றன.

புதிய மஹிந்திரா XUV 3XO மாடலிலும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. யூனிட்கள் வழங்கப்படுகின்றன.

இந்திய சந்தையில் அறிமுகமானதும் மஹிந்திரா XUV 3XO கார், மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்சான், கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ, ரெனால்ட் கைகர் மற்றும் நிசான் மேக்னைட் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News