கார்

ரூ. 23 லட்சம் பட்ஜெட்டில் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம்

Published On 2023-09-16 09:59 GMT   |   Update On 2023-09-16 09:59 GMT
  • ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் 2WD வெர்ஷனில் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் உள்ளது.
  • காரின் உள்புறம் ஆல் பிளாக் ஃபினிஷ் மற்றும் ரெட் இன்சர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் 2WD ஆட்டோமேடிக் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 23 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் 2WD வெர்ஷனில் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதில் ஆட்டோமேடிக் 9 ஸ்பீடு யூனிட் உள்ளது. இதே யூனிட் தான் 4WD AT மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

 

ஜீப் காம்பஸ் 2WD ஆட்டோமேடிக் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 9.8 நொடிகளில் எட்டிவிடும். அந்த வகையில், இந்த பிரிவில் அதிவேக மாடல் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. இத்துடன் பிளாக் ஷார்க் பேக்கேஜ் காரின் வெளிப்புறம் 18-இன்ச் பிளாக்டு-அவுட் வீல்கள், கிளாஸ் பிளாக் கிரில் மற்றும் பிளாக் இன்சர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

காரின் உள்புறம் ஆல் பிளாக் ஃபினிஷ் மற்றும் ரெட் இன்சர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் பானரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட் லிட்டருக்கு 16.2 கிலோமீட்டர்கள் வரையிலான மேலைஜ் வழங்கும் என்று ARAI சான்று பெற்று இருக்கிறது.

Tags:    

Similar News