கார்

வேற லெவல் அப்கிரேடுகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட 2026 RAV4

Published On 2025-05-22 11:58 IST   |   Update On 2025-05-22 11:58:00 IST
  • 2026 டொயோட்டா RAV4,"ஹேமர்ஹெட்" ஸ்டைல் கான்செப்ட்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
  • RAV4 இன் விலை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஜப்பானிய நிறுவனமான டொயோட்டா ஒருவழியாக ஆறாவது தலைமுறை RAV4 மாடலை அறிமுகம் செய்தது. புதிய 2026 டொயோட்டா RAV4 வடிவமைப்பு மாற்றங்களைக் கொண்டுள்ளது. இது ஒட்டுமொத்தமாக கூர்மையான தோற்றத்தை கொண்டிருக்கிறது. மேலும், இந்த மாடல் புதிய பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இது 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தாலும், இந்தியாவில் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

2026 டொயோட்டா RAV4: எஞ்சின் மற்றும் பவர்டிரெயின்

2026 RAV4 மாடல் ஹைப்ரிட் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. HEV மற்றும் PHEV அமைப்பு 2.5 லிட்டர் இன்லைன் பெட்ரோல் எஞ்சினைப் பயன்படுத்துகிறது. மேலும் ஹைப்ரிட் அமைப்பு FWD இல் 226 hp பவர் மற்றும் AWD அமைப்பில் 236 hp பவரை உற்பத்தி செய்கிறது.

டொயோட்டா RAV4 பிளக்-இன் ஹைப்ரிட் 22.7 kWh பேட்டரி பேக்கைப் பயன்படுத்துகிறது மற்றும் 320 hp பவர் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. புதிய RAV4 எலெக்ட்ரிக் மோடில் 80 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் சில வேரியண்ட்களுக்கு DC ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்குவதாக நிறுவனம் கூறியுள்ளது.

2026 டொயோட்டா RAV4: வெளிப்புறம் மற்றும் வடிவமைப்பு

2026 டொயோட்டா RAV4,"ஹேமர்ஹெட்" ஸ்டைல் கான்செப்ட்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் C-வடிவ LED ஹெட்லைட்கள், மஸ்குலர் ஹூட், செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள LED கொண்ட டெயில் லைட்களைக் கொண்ட முழு அகலமான லைட்பார், RAV4 பிரான்டிங் பெறுகிறது.



2026 டொயோட்டா RAV4: உட்புறம் மற்றும் அம்சங்கள்

ஆறாவது தலைமுறை டொயோட்டா RAV4 காரின் உட்புறத்தில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு முனைகளை திரை கட்டுப்பாடுகளுடன் மாற்றியுள்ளது. மேலும், டொயோட்டா புதிய பதிப்பில் கூடுதல் திரைகளைச் சேர்த்துள்ளது. இப்போது இது 12.3-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைப் பெற்றுள்ளது. மேலும் டொயோட்டாவின் புதிய அரினெ மென்பொருள் தளத்தால் இயக்கப்படும் 10.5-இன்ச் அல்லது 12.9-இன்ச் டச் ஸ்கிரீன் பெற்றுள்ளது.

2026 டொயோட்டா RAV4: வேரியண்ட் மற்றும் விலை

2026 RAV4 கார் கோர், ஸ்போர்ட், ரக்டு, வுட்லேண்ட் மற்றும் ஸ்போர்ட்-தீம் கொண்ட GR ஸ்போர்ட் வேரியண்ட்களில் கிடைக்கும் என்று டொயோட்டா கூறுகிறது. RAV4 இன் விலை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இந்தியாவில் அறிமுகம் செய்வது பற்றி எந்த விவரங்களையும் நிறுவனம் குறிப்பிடவில்லை. இதன் விலை USD 34,000-ஐ சுற்றி இருக்கும்.

Tags:    

Similar News