அல்ட்ரோஸ் மாடலை அப்டேட் செய்த டாடா - புதுசா என்னென்ன மாறி இருக்கு தெரியுமா?
- அனைத்து வேரியண்ட்களும் 6 ஏர்பேக் பாதுகாப்பு அம்சத்தை பெறுகின்றன.
- வேரியண்ட்களை பொறுத்து பல அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்திய கார் நிறுவனமான டாடா, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டாடா அல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வெளியிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அல்ட்ரோஸ் மாடல் முழுமையாக மேம்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக 2021 ஆம் ஆண்டில் இந்த காரின் டார்க் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டது.
2025 டாடா அல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் நேர்த்தியான, மெல்லிய கோடுகள் மற்றும் 3D முன்பக்க கிரில் கொண்டுள்ளது. இத்துடன் புதிய லுமினேட் LED விளக்குகள், இன்ஃபினிட்டி கனெக்டெட் LED டெயில் லைட்கள் மற்றும் ஃபிளஷ் டோர் ஹேண்டில்கள் ஆகியவற்றையும் பெறுகிறது. 2025 டாடா அல்ட்ரோஸில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள ஃபாக்-லேம்ப் ஹவுசிங், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்பக்க பம்பர் மற்றும் புதிய 5-ஸ்போக் 16-இன்ச் அலாய் வீல்கள் அடங்கும்.
டாடா அல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் உட்புறத்திலும், கேபினிலும் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது 2-ஸ்போக் ஸ்டீரிங் வீல், 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பல அம்சங்களை பெறுகிறது. ஒட்டுமொத்தமாக, டேஷ்போர்டின் வடிவமைப்பு புதுப்பிக்கப்பட்டு, முந்தைய மாடலில் இருப்பதை விட புதுமையான தோற்றத்தை அளிக்கிறது.
2025 டாடா அல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ், அக்கம்ப்ளிஷ்டு எஸ் மற்றும் அக்கம்ப்ளிஷ்டு + எஸ் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியண்ட்களும் 6 ஏர்பேக் பாதுகாப்பு அம்சத்தை பெறுகின்றன.
டாடா அல்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் 17.78cm தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட், ஆட்டோ ஃபோல்டு ORVM, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை, குரல் உதவியுடன் கூடிய மின்சார சன்ரூஃப் மற்றும் வேரியண்ட்களை பொறுத்து பல அம்சங்களைக் கொண்டுள்ளது.
அல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் அதன் தற்போதைய மாடலில் இருந்து எஞ்சினைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது 2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினையும் கொண்டுள்ளது.