கார்

2023 இன்னோவா க்ரிஸ்டா டீசல் முன்பதிவு துவக்கம்

Published On 2023-01-27 12:42 GMT   |   Update On 2023-01-27 12:42 GMT
  • டொயோட்டா நிறுவனத்தின் 2023 இன்னோவா க்ரிஸ்டா 2.4 லிட்டர் டீசல் என்ஜின் உடன் கிடைக்கிறது.
  • புதிய இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கான முன்பதிவு கட்டணம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா இந்தியா நிறுவனம் தனது இன்னோவா க்ரிஸ்டா மாடலை மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹைகிராஸ் உடன் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

இந்த மாடலில் 2.4 லிட்டர் டீசல் என்ஜின், நான்கு வேரியண்ட்கள், இருவித இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. 2023 இன்னோவா க்ரிஸ்டா மாடலின் முன்புறம் மாற்றப்பட்டு, அதிகளவு க்ரோம் ஹைலைட்களை பெற்று இருக்கிறது. இதன் முன்புற கிரில் பகுதியில் கிடைமட்டமான க்ரம் ஸ்டிரைப், பம்ப்பரில் க்ரோம் இன்சர்ட், ஃபாக் லேம்ப் ஹவுசிங் கொண்டிருக்கிறது.

இவை தவிர புதிய க்ரிஸ்டா மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த கார் G, GX, VX மற்றும் ZX என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த காரின் கேபின் பகுதியில் பவர்டு டிரைவர் சீட், ரியர் ஏசி வெண்ட்கள், டிஜிட்டல் டிஸ்ப்ளே, செட்பேக் டேபிள், லெதர் இருக்கை மேற்கவர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த கார் ஏழு மற்றும் எட்டு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. 2023 இன்னோவா மாடலில் ஏழு ஏர்பேக், முன்புறம் மற்றும் பின்புற பார்கிங் சென்சர்கள், பிரேக் அசிஸ்ட் மற்றும் 3-பாயிண்ட் சீட் பெல்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய க்ரில்சா மாடலில் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 148 ஹெச்பி பவர், 343 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. வரும் வாரங்களில் இந்த மாடலுக்கான விலை விவரங்கள் அறிவிக்கப்பட இருக்கிறது.

Tags:    

Similar News