கார்
பரிசளிக்கப்பட்ட மாருதி கார்கள்

சென்னையில் 100 ஊழியர்களுக்கு 100 காரை பரிசு கொடுத்து அசத்திய ஐடி நிறுவனம்

Published On 2022-04-12 13:46 IST   |   Update On 2022-04-12 13:46:00 IST
கிஸ்ஃப்ளோ என்ற நிறுவனம் 5 ஊழியர்களுக்கு பிஎம்டபில்யூ காரை பரிசளித்த நிலையில் தற்போது மற்றொரு ஐடி நிறுவனம் 100 ஊழியர்களுக்கு பரிசளித்துள்ளது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் Ideas2IT நிறுவனம் என்ற மென்பொருள் நிறுவனம், அதன் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் தொடர்ந்து உறுதுணையாக இருந்த ஊழியர்களை பாராட்டும் விதமாக 100 பேருக்கு புதிய மாருதி சுஸூகி கார்களை பரிசளித்துள்ளது.

இதுகுறித்து Ideas2IT நிறுவனத்தின் நிறுவனர் முரளி விவேகானந்தன் கூறுகையில், கார்களைப் பரிசளிப்பது குறித்து ஊழியர்களால் இணைந்து கூட்டாக முடிவு செய்யப்பட்டது. எங்கள் நிறுவனத்தில் ஐந்தாண்டுகள் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் கார் பரிசளிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

இந்த கார் எங்களது ஊழியர்கள் இதுவரை செய்த பணிக்காக வழங்கப்பட்டது. ஊழியர்களுக்கான ஊக்கத் திட்டங்களின் முதல் படி தான் இந்த நடவடிக்கை. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களுக்கு வளர்ச்சி ஒரு பங்கை அளிக்கும் முயற்சியாக இத்தகைய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளோம் எனக் கூறினார்.

இந்த கார்களில் எஸ் கிராஸ் முதல் பலேனோ கார் வரை வழங்கப்பட்டுள்ளது. பரிசுபெற்ற ஊழியர்கள் சென்னையில் இருந்து மட்டுமில்லாமல் பல மாவட்டங்களிலும், சிலர் சிறிய ஊர்களையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கிஸ்ஃப்ளோ என்ற நிறுவனம் 5 ஊழியர்களுக்கு பிஎம்டபில்யூ காரை பரிசளித்த நிலையில் தற்போது மற்றொரு ஐடி நிறுவனம் 100 ஊழியர்களுக்கு பரிசளித்துள்ளது.

Similar News