பைக்

150சிசியில் புதிய FZ-RAVE அறிமுகம் செய்த யமஹா... என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?

Published On 2025-11-12 11:36 IST   |   Update On 2025-11-12 11:36:00 IST
  • இந்த பைக் 136 கிலோ எடை மற்றும் 17-இன்ச் சக்கரங்களை கொண்டிருக்கிறது.
  • 13-லிட்டர் ஃபியூவல் டேன்க் வழங்கப்படுகிறது.

யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பைக் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. 150சிசி பிரிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள புதிய பைக் FZ-RAVE என அழைக்கப்படுகிறது. இந்த பைக்கின் அறிமுக விலை ரூ.1,17,218 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பைக் வழக்கமான FZ மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் பொசிஷன் லைட்டுடன் கூடிய ஃபுல்-எல்இடி ப்ரொஜெக்டர், நேர்த்தியான வென்ட்கள் கொண்ட ஃபியூவல் டேங்க் மற்றும் பின்புறத்தில் சிறிய எக்சாஸ்ட் ஆகியவை இடம்பெற்று இருக்கிறது.

இவை பைக்கிற்கு நேர்த்தியான தோற்றத்தை கொடுக்கிறது. பயணம் வசதியாகவும் நீண்ட மாலைப் பயணத்தில் கூட நிலையாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பைக்கில் சிங்கில்-பீஸ் இருக்கை மற்றும் ஒரு தெளிவான டெயில் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.

புதிய FZ-RAVE பைக்கிலும் யமஹாவின் நம்பகமான 149cc, ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 12.2bhp பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த பைக் 136 கிலோ எடை மற்றும் 17-இன்ச் சக்கரங்களை கொண்டிருக்கிறது. இதில் 13-லிட்டர் ஃபியூவல் டேன்க் வழங்கப்படுகிறது.

மேலும், சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகளுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த பைக் மேட் டைட்டன் மற்றும் மெட்டாலிக் பிளாக் என இரண்டுவித நிறங்களில் கிடைக்கிறது.

Tags:    

Similar News