பைக்

இனி ஒன்றல்ல, இரண்டு... ரைடர் 125 மாடலை அப்டேட் செய்த டிவிஎஸ்..!

Published On 2025-10-15 15:07 IST   |   Update On 2025-10-15 15:07:00 IST
  • இந்த பைக்கில் முதன் முதலாக டூயல் டிஸ்க் பிரேக்கை இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
  • ஐ-கோ அசிஸ்ட் தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் ரைடர் 125 மோட்டார்சைக்கிள் வரிசையில் டூயல் டிஸ்க் பிரேக் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இதில் 124.8 சிசி ஏர் மற்றும் ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் 3 வால்வு என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 11.38 பிஎஸ் பவரையும், 11.2 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.

இந்த பைக்கில் முதன் முதலாக டூயல் டிஸ்க் பிரேக்கை இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுபோல், 125 என்ஜின் பிரிவில் முதலாவதாக சில அம்சங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி ஐ-கோ அசிஸ்ட் தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது. கூடுதலாக இதில் பொருத்தப்பட்டிருக்கும் பாலோ-மி-ஹெட்லாம்ப், பார்க்கிங் செய்த பிறகு வீடு வரை செல்வதற்கு வழிகாட்டும் விளக்காக உதவும்.

நகர சாலையில் போக்குவரத்து நெரிசல்களிலும், சுலபமாக ஓட்டுவதற்கு ஏற்ப 'கிளைடு துரோ டெக்னாலஜி' தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது. டி.எப்.டி. மற்றும் எல்.சி.டி. என இரண்டு வேரியண்ட்கள் இதில் உள்ளன. டி.எப்.டி. டிஸ்பிளேயுடன் கூடியது சுமார் ரூ.95,600 எனவும், எல்.சி.டி. ஸ்கிரீன் கொண்டது ரூ.93,800 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News