பைக்

அட்வென்ச்சர் டூரர் பைக் அறிமுகம் செய்த டிவிஎஸ்... விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2025-10-16 14:23 IST   |   Update On 2025-10-16 14:23:00 IST
  • அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் கொண்ட 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் பயன்படுத்துகிறது.
  • ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட 5-இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே மேப் மிரரிங், நேவிகேஷன் கொண்டுள்ளது.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அட்வென்ச்சர் டூரர் பிரிவில் என்ட்ரி கொடுத்தது. புதிய டிவிஎஸ் அப்பாச்சி RTX பேஸ் மாடல் அறிமுக விலை ரூ. 1.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். சமீபத்திய RT-XD4 தளத்தில் உருவாக்கப்பட்ட இந்த மாடல், அப்பாச்சி சீரிசின் ஒரு முக்கியமான விரிவாக்கத்தைக் குறிக்கிறது.

இந்திய சந்தையில் புதிய RTX மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் மாடல் ரூ. 1.99 லட்சம், டாப் வேரியண்ட் ரூ. 2.14 லட்சம், மற்றும் கஸ்டம் ஸ்பெக் PTO வேரியண்ட் ரூ. 2.29 லட்சம் (அனைத்து விலைகளும் அறிமுக விலை, எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அப்பாச்சி RTX புதிதாக உருவாக்கப்பட்ட 299.1cc சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு, DOHC என்ஜினை பெற்றுள்ளது. இந்த யூனிட் 9,000rpm-இல் 35.5bhp பவர், 7,000rpm இல் 28.5Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் நீர் மற்றும் எண்ணெய் ஜாக்கெட்களுடன் டூயல் கூலிங் தொழில்நுட்பம் பெற்று இருக்கிறது. இத்துடன் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் கொண்ட 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் பயன்படுத்துகிறது.



புதிய RT-XD4 பிளாட்ஃபார்ம், டிவிஎஸ்-இன் அடுத்த தலைமுறை பொறியியல் அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. சிறந்த குளிரூட்டும் திறன், மென்மையான மின் விநியோகம் மற்றும் குறைக்கப்பட்ட உமிழ்வை வழங்குகிறது.

அபாச்சி RTX, ரைடர்-ஃபோகஸ்டு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது அர்பன், ரெயின், டூர் மற்றும் ரேலி என நான்கு ரைடு மோட்ககளைக் கொண்டுள்ளது. இத்துடன் பை-டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டர், குரூயிஸ் கண்ட்ரோல், லீனியர் டிராக்ஷன் கண்ட்ரோல் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட 5-இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே மேப் மிரரிங், நேவிகேஷன் கொண்டுள்ளது.

Tags:    

Similar News