பைக்

சுசுகியின் முதல் எலெக்ட்ரிக் 2-வீலர் - வெளியீடு எப்போ தெரியுமா?

Update: 2023-01-27 11:54 GMT
  • சுசுகி நிறுவனம் எட்டு புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உருவாக்கி வருகிறது.
  • சுசுகியின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனமாக எலெக்ட்ரிக் அக்சஸ் மாடல் இருக்கலாம்.

சுசுகி நிறுவனம் 2030 ஆண்டு வரையிலான சர்வதேச செயல் திட்டம் மற்றும் வாகனங்கள் வெலியீடு திட்டம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இதில் சில சுவாரஸ்யமான எலெர்ட்ரிக் மாடல்களும் இடம்பெற்றுள்ளன. சுசுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

முன்னதாக சுசுகி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் பர்க்மேன் ஸ்டிரீட் மாடலை டெஸ்டிங் செய்யும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. எனினும், அக்சஸ் எலெக்ட்ரிக் மாடலே சுசுகியின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனமாக அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

அக்சஸ் மாடல் சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல் ஆகும். மேலும் இது பர்க்மேன் ஸ்டிரீட் IC என்ஜின் வேரியண்டை விட குறைந்த விலையில் கிடைக்கிறது. அந்த வகையில் இது சுசுகியின் எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் மாடலாக இருக்கும். இதோடு எலெக்ட்ரிக் பர்க்மேன் ஸ்டிரீட் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது.

சுசுகியின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பிரிவில் 2030 ஆண்டிற்குள் மொத்தம் எட்டு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்கள் வெளியாகும் போதிலும், தொடர்ந்து IC என்ஜின் வாகனங்கள் பிரிவிலும் சுசுகி கவனம் செலுத்த இருக்கிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில் IC என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முறையே 75:25 முறையில் அறிமுகமாகிறது.

மோட்டார்சைக்கிள் பிரிவில் சுசுகி நிறுவனம் எந்த மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்யும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், ஜிக்சர் சீரிஸ் தான் எலெக்ட்ரிக் வடிவம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News