புதிய நிறம்... லிமிட்டெட் எடிஷன் பைக் அறிமுகம் செய்த ராயல் என்ஃபீல்டு
- ஹெட்லைட்கள் மற்றும் டர்ன் சிக்னல்கள் அனைத்தும் LED செய்யப்படுகின்றன.
- 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் இணைந்து செயல்படுகிறது.
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கோன் (Goan) கிளாசிக் 350 மாடலை 2024ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்தது. இப்போது, இந்த நிறுவனம் ஜெர்மனியில் மோட்டார் சைக்கிளின் ஸ்பெஷல் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இது ஒரு லிமிட்டெட் எடிஷன் மாடல் ஆகும். இந்த வேரியண்ட் "ட்ரிப் டீல்" எனும் விசேஷ நிறத்தில் கிடைக்கிறது. இந்த வேரியண்ட் மொத்தத்தில் 140 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பைக்கின் விலை 5590 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 5.68 லட்சம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் இந்த பைக்கின் விலை ரூ.2.37 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம், சென்னை) தொடங்குகிறது. குறிப்பாக ட்ரிப் டீல் நிற வேரியண்ட் ரூ. 2.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், சென்னை) விலையில் கிடைக்கிறது.
தோற்றத்தைப் பொறுத்தவரை, ராயல் என்ஃபீல்ட் கோன் கிளாசிக்கின் இந்த மாடல் டர்க்கொய்ஸ் மற்றும் ஆரஞ்சு சேர்ந்த நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் க்ரோம் அக்சென்ட்கள் மற்றும் ஆங்கில்டு எக்சாஸ்ட் கொண்டிருக்கிறது.
இந்த பைக்கில் கியர் இண்டிகேட்டர், யுஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது. ஹெட்லைட்கள் மற்றும் டர்ன் சிக்னல்கள் அனைத்தும் LED செய்யப்படுகின்றன.
ராயல் என்ஃபீல்ட் கோன் கிளாசிக் 350 பைக்கில் 349 சிசி திறன் கொண்ட ஏர் மற்றும் ஆயில்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் 6,100 ஆர்பிஎம்மில் 20.2 ஹெச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இது 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் இணைந்து செயல்படுகிறது.
இந்த பைக்கின் முன்புறத்தில் 41 மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க் உள்ளது, பின்புறத்தில் டூயல்-ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படுகின்றன. பிரேக்கிங்கிற்கு, முன்புறத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 270 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. இத்துடன் டூயல் சேனல் ABS கூடுதலாக வழங்கப்படுகிறது.