பைக்

முற்றிலும் புதிய ஹீரோ எக்ஸ்டிரீம் 160R - அசத்தல் டீசர் வெளியீடு

Published On 2023-06-08 06:25 GMT   |   Update On 2023-06-08 06:25 GMT
  • எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200T மாடல்களின் என்ஜினிலும் வால்வு செட்டப் மாற்றப்பட்டது.
  • பிரேக்கிங்கிற்கு புதிய எக்ஸ்டிரீம் 160R மாடலில் பெட்டல் டைப் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய எக்ஸ்டிரீம் 160R மாடலுக்கான டீசர்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. புதிய ஹீரோ எக்ஸ்டிரீம் 160R மாடல் இந்தியாவில் ஜூன் 14 ஆம் தேதி அறிமும் செய்யப்பட இருக்கிறது. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் டீசர் வீடியோவில் புதிய பைக்கின் முக்கிய அப்டேட்கள் தெரியவந்துள்ளது.

டீசர் வீடியோவின் படி புதிய எக்ஸ்டிரீம் 160R மாடலில் அப்சைடு டவுன் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஹீரோ எக்ஸ்டிரீம் 160R மாடலில் நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

முன்னதாக எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200T மாடல்களின் என்ஜினிலும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வால்வு செட்டப்-ஐ மாற்றி இருந்தது. இதேபோன்ற அப்டேட் 160R 4V மாடலிலும் வழங்கப்படும் என்று தெரிகிறது. தற்போதைய ஹீரோ எக்ஸ்டிரீம் 160R மாடலில் 163சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இது 15 ஹெச்பி பவர், 14 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

பிரேக்கிங்கிற்கு புதிய எக்ஸ்டிரீம் 160R மாடலில் பெட்டல் டைப் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் சிங்கில் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது. அறிமுகம் செய்யப்பட்டதும், புதிய எக்ஸ்டிரீம் 160R மாடல் டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V மற்றும் பஜாஜ் பல்சர் NS160 மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

Tags:    

Similar News