பைக்

அசத்தலாக தயாராகும் புதிய ஹீரோ கரிஸ்மா - வெளியீடு எப்போ தெரியுமா?

Published On 2023-03-23 13:26 GMT   |   Update On 2023-03-23 13:26 GMT
  • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கரிஸ்மா பைக் இந்திய சந்தையில் அதிக பிரபலமாக இருந்து வந்தது.
  • புதிய ஹீரோ கரிஸ்மா மாடலில் 210சிசி லிக்விட் கூல்டு எஞ்சின் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய கரிஸ்மா மாடலின் மூலம் பாரம்பரியம் மிக்க மோட்டார்சைக்கிள் பிராண்டு அவதாரத்தை மீண்டும் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹீரோ நிறுவனம் முற்றிலும் புதிய அடுத்த தலைமுறை கரிஸ்மா மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் முற்றிலும் புதிய எஞ்சின் மற்றும் சேசிஸ் கொண்டிருக்கும் என தெரிகிறது.

பிரீமியம் பிரிவில் களமிறங்கி போட்டியை ஏற்படுத்த செய்யும் முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மை ஹீரோ நிறுவனம் தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. பழைய கரிஸ்மா மாடலில் 223சிசி, ஏர் கூல்டு ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட எஞ்சின் வழங்கப்பட்டு இருந்தது. இந்த எஞ்சின் 20 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருந்தது.

புதிய ஹீரோ கரிஸ்மா மாடலில் 210சிசி, லிக்விட் கூல்டு எஞ்சின் வழங்கப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 25 ஹெச்பி பவர், 30 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் பற்றிய இதர விவரங்கள் மர்மமாகவே உள்ளது.

புதிய தலைமுறை கரிஸ்மா மாடல் அதன் முந்தைய வெர்ஷனை போன்ற ஸ்டைலிங் கொண்டிருக்கும் என தெரிகிறது. கரிஸ்மா பிராண்டு ஹீரோ நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க ஒன்றாகவும், அதிக பிரீமியம் மாடலாகவும் இருந்து வந்தது. ஹீரோ நிறுவனத்திற்கு அதிகளவு புகழை ஈட்டிக்கொடுத்த மாடலாக கரிஸ்மா விளங்கியது.

எனினும், 2014 வாக்கில் அறிமுகமான ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதைத் தொடர்ந்து மெல்ல இந்த மாடலின் விற்பனை குறையத் தொடங்கியது. காலப்போக்கில் இதன் விற்பனையும் நிறுத்தப்பட்டு விட்டது. புதிய மோட்டார்சைக்கிள் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

புதிய கரிஸ்மா மாடலின் மூலம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிரீமியம் பிரிவில் அதிக பங்குகளை கைப்பற்ற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. தற்போது ஹீரோ நிறுவனம் எக்ஸ்பல்ஸ் மாடல் மட்டுமே விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எக்ஸ்பல்ஸ் 200S மாடல் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இந்திய சந்தையில் புதிய கரிஸ்மா மாடல் முற்றிலும் புதிய பல்சர் 250s, ஜிக்சர் 250s மற்றும் டாமினர் 250 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Tags:    

Similar News