பைக்

குறைந்த விலையில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கும் ஏத்தர்

Published On 2022-09-07 07:53 GMT   |   Update On 2022-09-07 07:53 GMT
  • ஏத்தர் எனர்ஜி நிறுவனம் உருவாக்கி வரும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
  • இந்த ஸ்கூட்டரின் சோதனை நடைபெற்று வருவதை உணர்த்தும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தற்போது விற்பனை செய்து வரும் ஏத்தர் 450x மற்றும் 450 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் குறைந்த விலை ஸ்கூட்டர் மாடலை உருவாக்கி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், சோதனை செய்யப்படும் நிலையில், இதன் வெளிப்புற தோற்றம் தற்போது விற்பனை செய்யப்படும் ஏத்தர் ஸ்கூட்டர்களை போன்றே காட்சியளிக்கிறது.


விலை குறைவாக வைக்க 450X ஜென் 3 மாடலில் அளவில் சிறிய பேட்டரி மற்றும் மோட்டார் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். அந்த வகையில், இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மற்றும் ரேன்ஜ் குறைவாகவே இருக்கும். இது தவிர ஏத்தர் நிறுவன வழக்கப்படி இந்த ஸ்கூட்டரில் அதிநவீன அம்சங்கள் வழங்கப்படலாம். இதில் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஒடிஏ அப்டேட்கள், நேவிகேஷன் மற்றும் ஏராளமானவை அடங்கும்.

புதிய குறைந்த விலை ஸ்கூட்டர் மூலம் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஒலா எலெக்ட்ரிக் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்த ஒலா S1 மாடலுக்கு போட்டியை ஏற்படுத்தலாம். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் திரும்பப் பெறப்பட இருப்பதை ஒட்டி வரும் நாட்களில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விலை கணிசமாக அதிகரிக்கும் என தெரிகிறது. இந்த சூழலில் புதிய குறைந்த விலை ஸ்கூட்டர் ஏத்தர் நிறுவன விற்பனை சரிவதை தடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

Photo Source: ZigWheels

Tags:    

Similar News