பைக்

கே.டி.எம். லிமிடெட் எடிஷன் அறிமுகம் - விலை ரூ. 34.35 லட்சம் தான்

Published On 2024-03-14 14:59 GMT   |   Update On 2024-03-14 14:59 GMT
  • கே.டி.எம். நிறுவனத்தின் 2024 RC 8C மாடல் மொத்தத்தில் 100 யூனிட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • இந்த மாடலில் 889சிசி, டுவின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

கே.டி.எம். நிறுவனம் 2024 RC 8C மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இது லிமிடெட் எடிஷன் என்பதால் மொத்தத்தில் 100 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்த மாடலுக்கான முன்பதிவுகள் மார்ச் 20-ம் தேதி மதியம் 3 மணிக்கு கே.டி.எம். அதிகாரப்பூர்வ வலைதளத்தில் துவங்க இருக்கிறது.

2024 கே.டி.எம். RC 8C மாடலின் முன்பதிவு கட்டணம் 1000 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 90 ஆயிரத்து 462 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் கே.டி.எம். நிறுவனத்தின் RC 16 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் மெல்லியதாகவும், பெரிய ஏர் இன்டேக் உடன் ஏரோடைனமிக் டிசைன் கொண்டிருக்கிறது. இந்த மாடலின் ஒட்டுமொத்த எடை 142 கிலோ ஆகும்.

 


புதிய கே.டி.எம். RC 8C மாடலில் 889சிசி, LC8c பேரலல் டுவின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 135 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 43mm WP அபெக்ஸ் ப்ரோ ஃபோர்க்குகள், WP அபெக்ஸ் ரிமோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது.

பிரேக்கிங்கிற்கு பின்புறம் 290mm டூயல் டிஸ்க்குகள், முன்புறத்தில் 230mm டிஸ்க் மற்றும் பிரெம்போ 19RCS கோர்சா கார்டா ரேடியல் மாஸ்டர் பிரேக் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு உள்ளது. 2024 கே.டி.எம். RC 8C மாடலில் 5 இன்ச் அளவில் டி.எஃப்.டி. ரேஸ் டேஷ், டேட்டா லாகர் மற்றும் பில்ட்-இன் ஜி.பி.எஸ். வழங்கப்பட்டுள்ளது.

 


புதிய 2024 கே.டி.எம். RC 8C மாடலுக்கான முன்பதிவு ஐரோப்பா, அமெரிக்கா, மெக்சிகோ, கனடா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் மட்டுமே நடைபெறுகிறது. இதன் விலை 41 ஆயிரத்து 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 34 லட்சத்து 37 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News